MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அயோத்தி முதல் பஹிரா வரை... இந்த வாரம் மட்டும் இத்தனை தமிழ் படங்கள் ஓடிடியில் ரிலீஸா..! முழு லிஸ்ட் இதோ

அயோத்தி முதல் பஹிரா வரை... இந்த வாரம் மட்டும் இத்தனை தமிழ் படங்கள் ஓடிடியில் ரிலீஸா..! முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் வார வாரம் ஓடிடியிலும் படங்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த வாரம் மார்ச் 31-ந் தேதி 4 தமிழ் படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளன.

2 Min read
Author : Ganesh A
| Updated : Mar 31 2023, 01:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அயோத்தி

சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3-ந் தேதி பெரியளவில் விளம்பரமே இல்லாமல் திரையரங்கில் ரிலீஸ் ஆன படம் தான் அயோத்தி. இதையடுத்து ரசிகர்களை கவரும் வகையில் படம் அமைந்திருந்ததால், அடுத்தடுத்த வாரங்களில் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் இன்று (மார்ச் 31) ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை மந்திரமூர்த்தி இயக்கி உள்ளார்.

25

அகிலன்

ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த மார்ச் 10-ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆன படம் அகிலன். பூலோகம் படத்தின் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கிய இப்படமும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதன்படி இப்படம் இன்று (மார்ச் 31) ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.

35

பஹிரா

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த திரைப்படம் பஹிரா. சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் சாக்‌ஷி, அமைரா, சஞ்சிதா ஷெட்டி, ஜனனி, ரம்யா நம்பீசன், யாஷிகா என ஏகப்பட்ட ஹீரோயின்கள் நடித்திருந்தனர். இப்படம் இன்று (மார்ச் 31) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்... பிகினி ரேஞ்சுக்கு படு கிளாமரான உடையில்... விதவிதமா கவர்ச்சி போஸ் கொடுத்து கிக்கேற்றிய ஷிவானி - ஹாட் கிளிக்ஸ்

45

அரியவன்

திருச்சிற்றம்பலம் படத்தின் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் ரிலீசான படம் தான் அரியவன். புதுமுகங்கள் நடித்திருந்த இப்படம் கடந்த மார்ச் 3-ந் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில், தற்போது இப்படம் ஓடிடி தளத்துக்கு வந்துள்ளது. அதன்படி இன்று (மார்ச் 31) இப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது.

55

மற்ற மொழி படங்கள்

தெலுங்கில் அமிகோஸ் திரைப்படம் நெட்பிளிக்ஸிலும், ஸ்ரீதேவி சோபன்பாபு ஹாட்ஸ்டாரிலும், ஷாதி கானி ரெண்டு எகருலு படம் ஆஹா ஓடிடியிலும் ரிலீஸ் ஆகி உள்ளன. அதேபோல் இந்தியில் ஷேசடா நெட்பிளிக்ஸிலும், கேஸ்லைட் ஹாட்ஸ்டாரிலும் ரிலீஸ் ஆனது. மலையாளத்தில் என்கிலும் சந்திரிகே சிம்ப்ளி சவுத் ஓடிடியிலும், கன்னடத்தில் ஹோண்டிசி பரேயிரி திரைப்படம் ஏப்ரல் 1 முதல் அமேசான் பிரைமில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... Viduthalai movie review : சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் ''விடுதலை-1'' - மக்கள் கருத்து!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay: 20 ஆண்டுகளுக்கு முன்பே விஜய்க்கு அரசியலில் குதிக்க தயாராகிவிட்டார்.! பிரபல இயக்குனர் சொன்ன உண்மை.!
Recommended image2
ஜனனியை காப்பாற்றிய ஆலிவர் தேவசகாயம் யார்? எதிர்நீச்சல் சீரியலில் காத்திருக்கும் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
Music: மொத்தம் பத்து.! அத்தனையும் கெத்து.! எக்காலத்திற்கும் ஏற்ற 10 எஸ்.பி.பி பாடல்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved