08:52 PM (IST) Feb 29

சால்ஜாப்பு செய்யும் திமுக... சூறையாடும் திராவிட கட்சிகள்... இதுதான் அந்த திட்டங்கள் - பட்டியலிட்ட அண்ணாமலை!

முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்

08:24 PM (IST) Feb 29

டி.என்.பி.எஸ்.சி. 245 சிவில் நீதிபதிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் ரத்து!

டி.என்.பி.எஸ்.சி. 245 சிவில் நீதிபதிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

07:33 PM (IST) Feb 29

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதம் வளர்ச்சி: பிரதமர் மோடி மகிழ்ச்சி!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

06:56 PM (IST) Feb 29

விழுப்புரத்திலிருந்து மருத்துவர்களை டெபுடேஷனில் அனுப்பாதீர்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை!

விழுப்புரத்திலிருந்து மருத்துவர்களை டெபுடேஷனில் அனுப்ப வேண்டாம் என தமிழக அரசுக்கு ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்

06:56 PM (IST) Feb 29

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி: தருமபுரம் ஆதீனம்!

புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளார்

06:08 PM (IST) Feb 29

தருமபுரம் ஆதினம் வழக்கில் திருப்பம்: திருக்கடையூர் விஜயகுமாருக்கு தொடர்பில்லை - விருத்தகரி!

தருமபுரம் ஆதினம் வழக்கில் திடீர் திருப்பமாக திருக்கடையூர் விஜயகுமாருக்கு எந்த தொடர்பும் இல்லை என புகாரார்தாரர் விருத்தகரி தெரிவித்துள்ளார்

05:40 PM (IST) Feb 29

கர்நாடகா சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை: 9 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் சித்தராமையாவிடம் ஒப்படைப்பு!

கர்நாடகா சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை 9 ஆண்டுகளுக்கு பிறகு அம்மாநில முதல்வர் சித்தராமையாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

05:01 PM (IST) Feb 29

செய்தியாளர் மீது திமுகவினர் தாக்குதல் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்

04:44 PM (IST) Feb 29

எல் நினோவுக்கு குட்-பை: தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன ஹேப்பி நியூஸ்!

எல் நினோவின் தாக்கம் குறைந்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்

03:46 PM (IST) Feb 29

பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை குழு: ஹெச்.ராஜா இன்; அண்ணாமலை அவுட்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக குழு அமைத்துள்ளது

03:14 PM (IST) Feb 29

மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்குவதே எங்கள் நோக்கம்: ஓ.பி.ரவீந்திரநாத் சூளுரை!

மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்குவதே எங்கள் நோக்கம் என ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் சூளுரைத்துள்ளார்

02:23 PM (IST) Feb 29

நாளிதழ் விளம்பரத்தில் சீனக் கொடி சர்ச்சை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்!

நாளிதழ் விளம்பரத்தில் சீன கொடி சர்ச்சை தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்

01:52 PM (IST) Feb 29

மாநிலங்களவை தேர்தல் சலசலப்பு: பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை!

மாநிலங்களவை தேர்தல் பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில் முடிவடைந்தபோதும், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை

12:54 PM (IST) Feb 29

திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு.. மு.க.ஸ்டாலின்

திமுகவை ஒழித்து விடுவேன் இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று தான் வசிக்கும் பதவியை தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர் மோடி. திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

11:44 AM (IST) Feb 29

மக்களவைத் தேர்தலில் மதிமுக பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடும்.. அர்ஜூன் ராஜ்

ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவைத் தொகுதி ஒதுக்க வேண்டும் என திமுக-விடம் கேட்டுள்ளதாக மதிமுக அவைத் தலைவர் அர்ஜூன் ராஜ் தெரிவித்துதுள்ளார். கடந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, இம்முறை தனிச் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளோம் என்றார். 

11:21 AM (IST) Feb 29

ஹவுஸ்புல் காட்சிகள்! தமிழ்நாட்டில் பிரேமம் பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய மஞ்சுமெல் பாய்ஸ்

தமிழ் நாட்டில் சக்கைப்போடு போட்டு வரும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்துள்ளது.

10:44 AM (IST) Feb 29

போதைப்பொருள் வழக்கு.. தலைமறைவாக உள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல்!

போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. 

10:44 AM (IST) Feb 29

Today Gold Rate in Chennai : ஷாக்கிங் நியூஸ்! மீண்டும் எகிறிய தங்கம்.. இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:35 AM (IST) Feb 29

திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான தீபிகா படுகோனே... அப்பா ஆகப்போகும் குஷியில் ரன்வீர் சிங்

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ள தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

10:11 AM (IST) Feb 29

அட்லீ, வெற்றிமாறனுக்கு நோ சொல்லிவிட்டு ஆர்.ஜே.பாலாஜி பக்கம் திரும்பிய விஜய்? தளபதி 69-ல் திடீர் டுவிஸ்ட்

நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 திரைப்படத்தை இயக்க கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.