நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு 2023-24 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், அதாவது அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 8.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது என புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சிறந்த காலாண்டு அறிக்கை இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு முன், இதே காலாண்டில், நாட்டின் பொருளாதார முன்னேற்றமானது 4.3 சதவீதமாக இருந்தது. இருப்பினும், அதேகாலகட்டத்தின் இந்த காலாண்டில் மிகப்பெரிய வளர்ச்சி காணப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார வல்லுனர்கள் டிசம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என கணித்த போதும்கூட, அதனை விட அதிகமாக அளவீட்டை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பதிவு செய்துள்ளது. இந்த நிலையை எட்டுவதற்கு கட்டுமானத்துறை, உற்பத்தித் துறையிn வளர்ச்சி விகிதங்களே காரணம்.

தினமும் ரூ.405 முதலீடு செய்தால் ரூ.1 கோடி வருமானம் பெறலாம்.. அருமையான சேமிப்பு திட்டம்..

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு 2023-24 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், அதாவது ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.6 சதவீத வளர்ச்சியைக் கண்டிருந்தது. அரசாங்கத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2023-24 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்ச்சியை காட்டுகிறது.

Scroll to load tweet…

இந்த நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “2023-24 மூன்றாம் காலாண்டில் பதிவாகியுள்ள 8.4 சதவீத ஜிடிபி வளர்ச்சியானத, இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையையும் அதன் திறனையும் காட்டுகிறது. 140 கோடி இந்தியர்கள் சிறந்த வாழ்க்கை வாழவும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கவும் உதவும் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கான எங்களது முயற்சிகள் தொடரும்.” என பதிவிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 7 சதவீதம் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதமாக 3.6 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், 8ஆவது பெரிய பொருளாதாரத்தில் இருந்து 5ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உயர்ந்துள்ளது. மேலும், வருகிற 2027 ஆம் ஆண்டில் 3ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உயரும் எனவும், வருகிற 2030 க்குள் 7.3 டிரில்லியன் டாலர்கள் என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்தியா அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.