MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான தீபிகா படுகோனே... அப்பா ஆகப்போகும் குஷியில் ரன்வீர் சிங்

திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான தீபிகா படுகோனே... அப்பா ஆகப்போகும் குஷியில் ரன்வீர் சிங்

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ள தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

1 Min read
Author : Ganesh A
| Updated : Feb 29 2024, 10:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Deepika Padukone Ranveer Singh

Deepika Padukone Ranveer Singh

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் ரன்வீர், தீபிகா இருவருமே சினிமாவில் பிசியாக நடித்து வந்தனர். குறிப்பாக தீபிகா படுகோனே கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு மாஸ் ஹிட் படங்களில் நடித்துவிட்டார். அதில் ஒன்று பதான் மற்றொன்று ஜவான்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Deepika Padukone Husband Ranveer Singh

Deepika Padukone Husband Ranveer Singh

அந்த இரண்டு படங்களிலுமே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் தீபிகா. அந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து இந்த ஆண்டு தீபிகா படுகோனே நடிப்பில் ஃபைட்டர் என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடித்தார் தீபிகா. இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்... அட்லீ, வெற்றிமாறனுக்கு நோ சொல்லிவிட்டு ஆர்.ஜே.பாலாஜி பக்கம் திரும்பிய விஜய்? தளபதி 69-ல் திடீர் டுவிஸ்ட்

34
Deepika Padukone Ranveer Singh announce Pregnancy

Deepika Padukone Ranveer Singh announce Pregnancy

தற்போது நடிகை தீபிகா கைவசம் கல்கி திரைப்படம் உள்ளது. இதில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் தீபிகா. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இதில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் வருகிற மே மாதம் திரைக்கு வர உள்ளது. இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

44
Deepika Padukone Pregnant

Deepika Padukone Pregnant

இந்நிலையில், கல்கி படத்தில் நடித்து முடித்த கையோடு குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார் தீபிகா. அதன்படி தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க உள்ள மகிழ்ச்சிகரமான தகவலையும் தீபிகா பகிர்ந்துள்ளார். திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமாகி இருக்கும் தீபிகாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... “ராசாவே உன்ன காணாத நெஞ்சு” பாடல் நடிகையை ஞாபகம் இருக்கா? இவங்களோட மகளும் பிரபல ஹீரோயின் தான்..

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved