டி.என்.பி.எஸ்.சி. 245 சிவில் நீதிபதிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் ரத்து!
டி.என்.பி.எஸ்.சி. 245 சிவில் நீதிபதிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் சிவில் நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) இந்த தேர்வினை நடத்தியது. மொத்தம் 12037 இந்த தேர்வை எழுதினர்.
இந்த தேர்வு முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. அதன்படி நேர்முக தேர்வுக்கு 472 பேர் அழைக்கப்பட்டனர். அதில் தேர்வான சிவில் நீதிபதிகளுக்கான 245 பேர் கொண்ட தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.
ஆனால், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டதில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டதில் குளறுபடிகள் இருப்பதாக கூறி தேர்வில் பங்கேற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அதில், அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களை பொதுப்பிரிவில் சேர்த்ததாக கூறப்பட்டிருந்தது. மேலும், வழக்கு விசாரணையின்போது, இந்த இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தவறு என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதம் வளர்ச்சி: பிரதமர் மோடி மகிழ்ச்சி!
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டி.என்.பி.எஸ்.சி. 245 சிவில் நீதிபதிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டது. தற்காலிக பட்டியல் தான் வெளியிடப்பட்டுள்ளது; நியமன ஆணைகள் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இரண்டு வாரங்களில் புதிய பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.