MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. புகுந்து விளாசப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. புகுந்து விளாசப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 17 2026, 02:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வானிலை மையம் முக்கிய அப்டேட்
Image Credit : our own

வானிலை மையம் முக்கிய அப்டேட்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மண்டைய பொளக்கும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. ஒரு சில இடங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்கினர். இந்நிலையில் வரும் நாட்களில் வெயில் குறைந்து மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

25
இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை
Image Credit : Asianet News

இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

அதாவது தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் மார்ச் 19 டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
ஜாக்பாட் அறிவிப்பு! இனி பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் ரூ.10,000 தள்ளுபடி.! யாருக்கெல்லாம் சலுகை பொருந்தும்?
Related image2
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு.. மீறினால் ஆப்பு தான்!
35
டெல்டா மாவட்டங்களில் மழை
Image Credit : Asianet News

டெல்டா மாவட்டங்களில் மழை

மார்ச் 20 டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும். மார்ச் 21 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

45
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்
Image Credit : Google

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்

மார்ச் 22 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மார்ச் 23 தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணித்துள்ளது.

55
சென்னையில் மழைக்கு வாய்ப்பா?
Image Credit : our own

சென்னையில் மழைக்கு வாய்ப்பா?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றுவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
சென்னை
வெப்ப அலை
Latest Videos
Recommended Stories
Recommended image1
கனிமொழி, சபரீசன், தயாநிதி மாறனை வம்புக்கு இழுக்கும் RB உதயகுமார்! என்ன சொல்லி இருக்காரு நீங்களே பாருங்களே!
Recommended image2
Now Playing
முதல்வர் உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கிறார். எனக்கு நயன்தாரா(நடிகை) வேண்டும் கொடுப்பாரா...
Recommended image3
டிரம்பின் விபரீத விளையாட்டு..! ஈரான் வலையில் சிக்கிய அமெரிக்கா..! கைவிட்ட அரபு நாடுகள்..!
Related Stories
Recommended image1
ஜாக்பாட் அறிவிப்பு! இனி பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் ரூ.10,000 தள்ளுபடி.! யாருக்கெல்லாம் சலுகை பொருந்தும்?
Recommended image2
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு.. மீறினால் ஆப்பு தான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved