MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கனிமொழி, சபரீசன், தயாநிதி மாறனை வம்புக்கு இழுக்கும் RB உதயகுமார்! என்ன சொல்லி இருக்காரு நீங்களே பாருங்களே!

கனிமொழி, சபரீசன், தயாநிதி மாறனை வம்புக்கு இழுக்கும் RB உதயகுமார்! என்ன சொல்லி இருக்காரு நீங்களே பாருங்களே!

திமுக ஆட்சியில் வாரிசு அரசியலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மன்னராட்சி போல செயல்படுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். எடப்பாடியார் தலைமையில் ஜனநாயக ஆட்சியை அமைப்பார்கள்.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 17 2026, 02:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழகத்தில் வாரிசு அரசியல்
Image Credit : Google

தமிழகத்தில் வாரிசு அரசியல்

மன்னராட்சியின் சிந்தனையில் இருக்கிற திமுக ஆட்சிக்கு நாம் முடிவுரை எழுதி, எடப்பாடியாரின் தலைமையிலான ஜனநாயக ஆட்சிக்கு தொடக்க உரை எனது மக்கள் தயாராகி விட்டார்கள் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்: ஜனநாயக தேர்தல் திருவிழா தேதி அறிவிக்கப்பட்டு, வாக்குபதிவு அறிவிக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு ஜனநாயகம் காப்பதற்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தின் அதிகாரம் பரவல் ஆகப்பட்டது என்றும் இன்றைக்கு திராவிட முதல்வர் என்று தனக்குத்தானே பட்டத்தை ஸ்டாலின் சூட்டிக் கொண்டுள்ளார். ஆனால் தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு இன்றைக்கு முன்னுரிமை கொடுத்து பதவிகள் வழங்கப்பட்டு வருவதை தமிழ்நாட்டு மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த 2026 தேர்தல் அமையும் என்பது எல்லோருடைய நம்பிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவரது மகன் ஸ்டாலின் வாரிசு அரசியல் அடிப்படையிலே முதலமைச்சராக வருகிறார்.

25
நாங்கள் தோள் கொடுத்து பல்லாக்கு தூக்குவோம்
Image Credit : our own

நாங்கள் தோள் கொடுத்து பல்லாக்கு தூக்குவோம்

தொடர்ந்து கட்சிக்காக உழைத்த பல தொண்டர்கள் புறக்கணிக்கப்பட்டு ஸ்டாலின் மகன் உதயநிதியை துணை முதல்வராக ஆகப்பட்டு, இப்போது உதயநிதி தொடர்ந்து அவரது மகன் இன்பநிதியை இப்போதே கட்சி நிகழ்ச்சிகளை அடிக்கடி தென்பட துவங்குகிறார் அவரும் முதல்வராவதற்கு நாங்கள் தோள் கொடுத்து பல்லாக்கு தூக்குவோம் என்று ஆங்காங்கே குரல் எழுப்புக் கொண்டிருப்பதை மக்கள் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Related Articles

Related image1
திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு! கிரிவலம் செல்ல இலவச ஏசி பேருந்து.. எந்த நேரம் வரை இயக்கம்!
Related image2
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு.. மீறினால் ஆப்பு தான்!
35
வாரிசுகளும் அதிகாரம்
Image Credit : Asianet News

வாரிசுகளும் அதிகாரம்

அதோடு மட்டுமல்லாமல் கலைஞருடைய மகள் கனிமொழி, ஸ்டாலின் மருமகன் சபரீசன், கருணாநிதியின் அக்கா பேரன் தயாநிதி மாறன் போன்றவர்களும் கட்சியின் அதிகாரம் மையங்களாக செயல்பட்டு வருவதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கூடுதலாக டி.ஆர் பாலு பொய்யாமணி, ஆற்காடு வீராசாமி, அன்பழகன், தங்கப்பாண்டி, பொன்முடி, நேரு, துரைமுருகன், பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், ஐ.பெரியசாமி போன்ற வாரிசுகளும் அதிகாரம் மையங்களாக உள்ளதையும் இந்த ஐந்தாண்டு காலத்திலே மக்கள் மிக கவனமாக அதை கடந்து வந்திருக்கின்றார்கள்.

45
மன்னராட்சி ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவால்
Image Credit : GOOGLE

மன்னராட்சி ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவால்

இவர்களை தவிர அடிமட்ட தொண்டர்கள் எவரும் கட்சியிலே அதிகாரம் மையமாக வந்து உள்ளார்களா? ஏன் அவர்களுக்கு திறமைகளை இல்லையா? ஆற்றல் இல்லையா? அவர்களுக்கு சிந்தனை இல்லையா? திறமையாக செயல்பட முடியாதா? அல்லது அரசியல் என்பது நான் மேலே குறிப்பிட்ட அதிகார மையங்களுக்கு மட்டும் குலத்தொழிலா? என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக இருக்கிறது.

ஆகவே ஜனநாயக அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்ற அந்த திராவிட சித்தாந்தத்தை கட்சியிலும், ஆட்சியிலும், அந்த அதிகாரத்தை தன் குடும்ப உறுப்பினர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதின் பெயர்தான் ஜனநாயக அதிகாரம் பரவலாக்கப்படுகிறதா என்பதை இந்த தேர்தலிலே மக்கள் சிந்திக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆகவே திமுகவினுடைய இந்த மன்னராட்சி சிந்தனையை ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டு இருக்கிற சவாலாக தான் தமிழ்நாட்டு மக்கள் பார்க்கிறார்கள்.

55
இபிஎஸ் வெற்றியை பரிசாக மக்கள் தருவார்கள்
Image Credit : Google

இபிஎஸ் வெற்றியை பரிசாக மக்கள் தருவார்கள்

எனவே வாரிசு அரசியலை தான் நாங்கள் முன்னெடுப்போம் என்று உறுதியோடு செயல்பட்டு வருகிற திமுகவிற்கு இந்த தேர்தலிலே தோல்வியை பரிசாக கொடுத்து, தாய் தமிழ்நாட்டினுடைய ஜனநாயகத்திற்கும், மக்களாட்சிக்கும் தான் மக்கள் மகுடம் சூட்டுவார்கள் என்பதை இந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தீர்ப்பு நமக்கு நிச்சயமாக ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருக்கும். எடப்பாடியாருக்கு வெற்றியை பரிசாக மக்கள் தருவார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்துவது தான் ஜனநாயகத்திற்கு நாம் செய்கிற நன்றி கடன். ஆகவே மன்னராட்சியின் சிந்தனையில் இருக்கிற திமுக ஆட்சிக்கு நாம் முடிவுரை எழுதி, எடப்பாடியாரின் தலைமையிலான ஜனநாயக ஆட்சிக்கு தொடக்க உரை எனது மக்கள் தயாராகி விட்டார்கள் என கூறினார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
மு. க. ஸ்டாலின்
திமுக
கனிமொழி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
முதல்வர் உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கிறார். எனக்கு நயன்தாரா(நடிகை) வேண்டும் கொடுப்பாரா...
Recommended image2
டிரம்பின் விபரீத விளையாட்டு..! ஈரான் வலையில் சிக்கிய அமெரிக்கா..! கைவிட்ட அரபு நாடுகள்..!
Recommended image3
ஸ்டாலினுக்கு 13 மார்க். பெற்றோரும், தாய்மார்களும் மன்னிக்கக்கூடாது…! அன்புமணி ஆவேசம்
Related Stories
Recommended image1
திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு! கிரிவலம் செல்ல இலவச ஏசி பேருந்து.. எந்த நேரம் வரை இயக்கம்!
Recommended image2
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு.. மீறினால் ஆப்பு தான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved