MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஹவுஸ்புல் காட்சிகள்! தமிழ்நாட்டில் பிரேமம் பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய மஞ்சுமெல் பாய்ஸ்

ஹவுஸ்புல் காட்சிகள்! தமிழ்நாட்டில் பிரேமம் பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய மஞ்சுமெல் பாய்ஸ்

தமிழ் நாட்டில் சக்கைப்போடு போட்டு வரும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 29 2024, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Manjummel Boys

Manjummel Boys

தமிழ்நாட்டில் மலையாள படங்களுக்கு மவுசு அதிகரிக்க காரணம் பிரேமம் படம் தான். அப்படம் கேரளாவை போல் தமிழ்நாட்டிலும் சக்கைப்போடு போட்டு திரையரங்கில் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. பிரேமம் படத்திற்கு தமிழ் மக்கள் கொடுத்த வரவேற்பால், கேரளாவில் நல்ல வரவேற்பை பெறும் மலையாள படங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் லேட்டஸ்டாக ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Manjummel Boys Box Office Collection

Manjummel Boys Box Office Collection

சிதம்பரம் என்பவர் இயக்கியுள்ள இப்படம் கடந்த 2006-ம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவின் மஞ்சுமெல் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது, அதில் ஒருவர் மட்டும் குணா குகையில் சிக்கிக் கொள்கிறார். அவரை எப்படி மீட்டார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. இப்படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் நடப்பதால் இதற்கு இங்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதையும் படியுங்கள்... கமல்ஹாசனை மெர்சலாக்கிய மஞ்சுமெல் பாய்ஸ்... படக்குழுவை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த உலகநாயகன்

34
Manjummel Boys Movie Tamilnadu Box Office Collection

Manjummel Boys Movie Tamilnadu Box Office Collection

அதுமட்டுமின்றி தமிழில் அண்மையில் ரிலீசான படங்கள் எதுவும் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் படம் இங்கு ரிலீஸ் செய்யப்பட்டு சக்கைப்போடு போட்டு வருகிறது. இதனால் இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வெறும் ரூ.10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படம் ரிலீஸான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது.

44
Manjummel Boys beats Premam

Manjummel Boys beats Premam

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.3 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்கிற சாதனையை மஞ்சுமெல் பாய்ஸ் படைத்துள்ளது. இதற்கு முன்னர் வெளிவந்த மலையாள படங்களில் 2018 திரைப்படம் ரூ.2.25 கோடியையும், ஹிரிதயம் ரூ.2.13 கோடி, லூசிபர் ரூ.2.12 கோடி என வசூலித்து இருந்தது. அதேபோல் பிரேமம் படம் 2015-ம் ஆண்டு ரிலீஸ் ஆன போது ரூ.2 கோடி வசூலித்து இருந்தது. அதுமட்டுமின்றி அண்மையில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோதும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் அதிக வசூல் செய்த மலையாள படங்கள் பட்டியலில் பிரேமம் முதலிடம் பிடித்திருந்த நிலையில், தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் அதை முறியடித்திருக்கிறது. 

இதையும் படியுங்கள்... திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான தீபிகா படுகோனே... அப்பா ஆகப்போகும் குஷியில் ரன்வீர் சிங்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved