Asianet News TamilAsianet News Tamil

போதைப்பொருள் வழக்கு.. தலைமறைவாக உள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல்!

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Drug Trafficking case... Former DMK executive Jaffer Sadiq house sealed tvk
Author
First Published Feb 29, 2024, 9:55 AM IST

போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. 

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட  விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. 

இதையும் படிங்க: முதல்வர் மட்டுமா? உதயநிதி முதல் திருமா வரை.. அனைவரையும் விசாரிக்க வேண்டும்.. அண்ணாமலை அதிரடி

Drug Trafficking case... Former DMK executive Jaffer Sadiq house sealed tvk

போதைப்பொருள்  கடத்தல் கும்பல் தலைவனாக திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 26ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தனது குடும்பத்துடன் ஜாபர் சாதிக் தலைமறைவாகியுள்ளார். 

இதையும் படிங்க:  இயக்குனர் அமீர் முதல் கயல் ஆனந்தி படம் வரை.. சினிமா தயாரிப்பாளர் டூ திமுக பிரமுகர்.. யார் இந்த ஜாபர் சாதிக்?

Drug Trafficking case... Former DMK executive Jaffer Sadiq house sealed tvk

இந்நிலையில், அவரை தேடி தமிழகம் வந்த மத்திய போதை பொருள் கடதத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் சொந்தத ஊரான கமுதி மற்றும் ராமநாபுரத்தில் முகாமிட்டுள்ளனர். மேலும், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஜாபர் சாதிக்கு சொந்தமான வீட்டில் இன்று காலை சோதனை நடத்திய அததிகாரிகள் அவரது வீட்டுக்கு சீல் வைத்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios