- Home
- Tamil Nadu News
- Power Cut in Tamilnadu: போட்டு பொளக்கும் கத்திரி வெயில்! மே 27ம் தேதி தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு!
Power Cut in Tamilnadu: போட்டு பொளக்கும் கத்திரி வெயில்! மே 27ம் தேதி தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு!
Power Cut Areas: தமிழகம் முழுவதும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி நாளை தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை.

சுட்டெரிக்கும் கத்திரி வெயில்
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அதேநேரத்தில் வீட்டில் இருக்கும் போது கடும் புழுக்கம் காரணமாக வீட்டில் ஃபேன், ஏசி எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக மின்தேவையும் புதிய உச்சத்தை பெற்று வருகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
இந்நிலையில் தமிழகம் முழுவதும் தங்குதடையன்றி மின் விநியோகத்தை உறுதி செய்யும் விதமாக மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அன்றைய தினம் மின்வயர் செல்லும் பாதைகளில் மரக்கிளைகள் வெட்டுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
மின்தடை ஏற்படும் இடங்கள் லிஸ்ட்
இதுகுறித்து செல்போனில் சார்ஜ் மற்றும் சைட்னி, மோட்டர் போட்டு வைத்து கொள்ள ஏதுவாக பொதுமக்களுக்கு முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தெரிவிக்கப்படும். அதன்படி புதன் கிழமையான நாளை (27-05-2026) தமிழகம் முழுவதும் 5 முதல் 8 மணி நேரம் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை
கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர், யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கேஎன்ஜி புதூர், அகர்வால் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
மேட்டூர்
தோப்பூர், சேகரப்பட்டி, கம்மம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
உடுமலைப்பேட்டை
பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், ஊஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பாறைபாளையம், நல்லூர், அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், பரமடையூர், பி.என்.நூர், எம்.ஜி.நூர், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

