Herbal Tea: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க அருமையான மூலிகை டீ செய்யலாம் வாங்க!
காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். அதுபோல, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஒரு சிறந்த பானத்தை எப்படித் தயாரிப்பது என இப்போது பார்ப்போம்.
நமக்கு நோய்கள் மிக எளிதாக தாக்குவதற்கு முக்கிய காரணமே, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பது தான். ஆனால், அதுவே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருந்தால், நம்மை நோய்கள் அவ்வளவு எளிதில் நெருங்கி விடாது. ஆகையால் தான், ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என அனைவரும் சொல்கிறார்கள். காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். அதுபோல, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஒரு சிறந்த பானத்தை எப்படித் தயாரிப்பது என இப்போது பார்ப்போம்.
நோய் எதிர்ப்புச் சக்தி
பொதுவாக நம் உடலுக்கு சக்தி என்பது மிக மிக அத்தியாவசியமான ஒன்று. நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து விட்டால், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து போய் விடும். உடல் வலுவிழந்து விட்டால் தானாகவே நோய் பாதிப்புகள் நம்மைச் சூழ்ந்து கொள்ளும் அபாயம் உள்ளது. ஆகவே, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியானது நமக்கு மிகவும் முக்கியமானது. இதனைச் சரிசெய்ய ஒரு சிறந்த மூலிகை டீ போதுமானது. இந்த மூலிகை டீயை தயாரிப்பது மிகவும் எளிதானது.
தேவையானப் பொருட்கள்
- குருமிளகு
- ஏலக்காய்
- காய்ந்த இஞ்சிப் பொடி
- இலவங்கப்பட்டை
- ஓமம்
- மஞ்சள்
- விடுமுறை ஸ்பெஷல்- சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் செய்து அனைவரும் சாப்பிடலாம்!
செய்முறை
முதலில் குருமிளகு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் ஓமம் போன்றவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, சிறிய பாத்திரத்தில் தண்ணீரை சேர்த்து சூடாக்கிக் கொள்ள வேண்டும்.
சூடான தண்ணீரில் காய்ந்த இஞ்சிப் பொடி மற்றும் மஞ்சள் தூளைச் சேர்த்து நன்றாக சூடாக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு முன்னதாக அரைத்து வைத்திருந்த குருமிளகு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் ஓமம் கலந்த பொடியையும் சூடான தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சூடான மூலிகை டீ தயாராகி விடும்.
அடிக்கடி தொடர்ந்து இந்த மூலிகைத் தேநீரை செய்து, குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி பன்மடங்கு பெருகும். தினந்தோறும் டீ மற்றும் காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், இதற்குப் பதிலாக இந்த மூலிகைத் தேநீரை குடித்து வந்தால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.