Asianet News TamilAsianet News Tamil

காலை உணவாக ராகி, சோளம், கோதுமை ரொட்டி; எது சிறந்தது?

காலை உணவாக என்ன சாப்பிடலாம் என்பதே பல வீடுகளிலும் விவாதமாக இருக்கும். குறிப்பாக ராகி, சோளம் மற்றும் கோதுமை ரொட்டி ஆகியவை ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி உடல் எடை இழப்புக்கும், ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டுக்கும் உதவும். 

 Healthiest Breakfast: Which is good for breakfast Ragi, maise or Wheat Roti
Author
First Published Sep 26, 2024, 9:57 PM IST | Last Updated Sep 26, 2024, 9:57 PM IST

சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவை நமது அன்றாட உணவுகளில் பழகிப் போன ஒன்று. காலை மற்றும் இரவு உணவாக இதுதான் பெரும்பாலும் எடுத்துக் கொள்கின்றனர். இது சட்னி, சாம்பார், காய்கறிகள், பருப்பு வகைகள, குழம்புகளுடன் பரிமாறப்படுகிறது, ஆனால் காலை உணவாக ராகி, சோளம், கோதுமை ரொட்டி சாப்பிடுவது குறித்து நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? காலை உணவிற்கு எது  சிறந்தது? கோதுமை ரொட்டி தவிர, ராகி, சோளம், தினை போன்ற பல்வேறு மாவு வகைகளில் இருந்தும் ரொட்டி தயாரிக்கப்படுகிறது. காலை உணவிற்கு எந்த ரொட்டி சிறந்தது என்பதை பார்க்கலாம். 

ராகி ரொட்டி

ராகியில் கால்சியம், இரும்பு, நார்ச்சத்து நிறைந்துள்ளது. காலை உணவாக ரொட்டி அல்லது கழி செய்து உண்பது ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. எடை இழப்புக்கு உதவும். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இருப்பினும், அதிகப்படியான ராகி ரொட்டியை உட்கொள்வது சிலருக்கு சிறுநீரக கற்கள் அல்லது அதிக கால்சியம் அளவை ஏற்படுத்தும்.

சோளம் ரொட்டி

சோளம் ரொட்டி மிகச் சிறந்த உணவாகும். இது உணவு நார்ச்சத்து, புரதம், தாதுக்கள், இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்தது. உங்கள் உணவில், குறிப்பாக காலை உணவில் இதைச் சேர்ப்பது எடை இழப்புக்கு உதவும்.

முட்டையை விட அதிக புரதம் கொண்ட சைவ உணவுகள்! இந்த புரட்டாசியில் பெஸ்ட் சாய்ஸ்!

கோதுமை ரொட்டி

கோதுமை ரொட்டி இந்திய சமையலறைகளில் அதிகம் தயாரிக்கப்படுகிறது. இதில் கார்போஹைட்ரேட், புரதம், சிறிய அளவில் நார்ச்சத்து உள்ளது. இதில் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் உள்ளன. கோதுமை மாவு ரொட்டி கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

காலை உணவிற்கு எது சிறந்தது: கோதுமை, சோளம் அல்லது ராகி ரொட்டி?

கோதுமை, சோளம் மற்றும் ராகி ரொட்டியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, காலை உணவிற்கு ஆரோக்கியமானதாக ராகி ரொட்டியை கூறலாம். இது எடை இழப்பு, ரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கூடுதலாக, சோளம் ரொட்டியில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை செரிமானம், இதய ஆரோக்கியம் மற்றும் பசையம் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். எனவே, பசையம் இல்லாத ரொட்டியை விரும்புபவர்கள் ராகி, சோளம் ரொட்டியை தேர்ந்தெடுக்க வேண்டும், அதே நேரம் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவை விரும்புபவர்களுக்கு முழு கோதுமை ரொட்டி நன்மை பயக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, கோதுமை ரொட்டியுடன் ஒப்பிடும்போது சோளம், ராகி ரொட்டி அதிக ஊட்டச்சத்து நிறைந்தவை.

தினமும் ஒரு செவ்வாழை.. கொட்டி கிடக்கும் சத்துக்கள் தவிர இன்னொரு நன்மை இருக்கு!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios