விடுமுறை ஸ்பெஷல்- சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் செய்து அனைவரும் சாப்பிடலாம்!
வாருங்கள் ! க்ரிஸ்பியனா சாக்லேட் சிப்ஸ் குக்கீஸினை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பொங்கல் பண்டிகை காரணமாக தொடர் விடுமுறையில் உள்ள குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடுகின்ற ஸ்னாக்ஸ் வகைகளை செய்தால் சத்தம் மில்லாமல் அனைத்தையும் மகிழ்ச்சியாக சாப்பிட்டு முடிப்பார்கள். அப்படி அவர்கள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்றான சாக்கோ சிப்ஸ் குக்கீஸை தான் இன்று காண உள்ளோம்.
மேலும் இதனை நாம் வெகு நாட்கள் வைத்து கூட சாப்பிடலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் பாக்ஸிற்கும் கொடுத்து அனுப்பலாம். விடுமுறைக்காக வரும் வெளியூர்களில் இருந்து வரும் உறவினர்களுக்கும் இதனை செய்து கொடுத்து நமது அன்பினை வெளிப்படுத்தலாம்.
வாருங்கள் ! க்ரிஸ்பியனா சாக்லேட் சிப்ஸ் குக்கீஸினை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- மைதா மாவு - 50 கிராம்
- வெனிலா எசென்ஸ் - 1 ஸ்பூன்
- ஐசிங் சுகர் - 30 கிராம்
- பட்டர் - 30 கிராம்
- கோகோ பவுடர் -1/2 ஸ்பூன்
- பால் பவுடர் - 10 கிராம்
- சாக்கோ சிப்ஸ் - தேவையான அளவு
- பேக்கிங் பவுடர் - 2 சிட்டிகை
சிறுநீரக பிரச்சனையை ஒழிக்க உதவும் வாழைத்தண்டு வைத்து டேஸ்டான வாழைத்தண்டு மோர் கூட்டு செய்து சாப்பிடுங்க!.
செய்முறை:
முதலில் அவனை 150 டிகிரி செல்ஷியிற்கு (pre Heat ) ப்ரீஹீட் செய்து கொள்ள வேண்டும். ஒரு பௌலில் அல்லது தட்டில் மைதா மாவினை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சின்ன பௌலில் பட்டரை நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும்.பின் அதில் ஐசிங் சுகர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது கலவையில் சலித்து வைத்துள்ள மைதா, பால் பவுடர் ஆகியவற்றை சேர்த்து சாஃப்ட்டாக, கொஞ்சம் பிசுபிசுப்பான கலவையாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் இந்த மிக்ஸ் செய்த மாவினில் சிறிது கோகோ பவுடர், வெனிலா எசென்ஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை கையில் எடுத்து சிறிய அளவிலான ஒரே மாதிரியான அளவில் உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும். பின் உருண்டைகளை பட்டர் ஸ்ப்ரெட் செய்து வைத்துள்ள பேக்கிங் ட்ரேயில் வைத்து அதன் மேல் சாக்கோ சிப்ஸ்களை தூவி விட வேண்டும்.
ட்ரேயில் அனைத்து குக்கீஸ்களையும் வைத்த பின் அதனை அவனில் வைத்து சுமார் 15 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதான் சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் ரெடி! ஆறிய பின் க்ரிஸ்பியான குக்கீஸினை காற்று புகாத டப்பாவில் பக்குவமாக போட்டு வைத்தால் 20 நாட்கள் வரை பயன்படுத்தலாம்