நாகேஷ் ஸ்டைலில் ஒரு கேரக்டர்; கலக்க வரும் பிரபு தேவாவின் "ஜாலியோ ஜிம்கானா" - லேட்டஸ்ட் அப்டேட்!

Jolly O Gymkhana : பிரபு தேவா வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தின் அப்டேட் இப்பொது வெளியாகியுள்ளது.

First Published Nov 18, 2024, 11:54 PM IST | Last Updated Nov 18, 2024, 11:54 PM IST

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபல நடிகர் பிரபுதேவா மற்றும் யோகி பாபு அசத்தியிருக்கும் திரைப்படம் தான் "ஜாலியோ ஜிம்கானா". உலகநாயகன் கமல்ஹாசனின் "மகளிர் மட்டும்" திரைப்படத்தில், இறந்த பிணமாக நடித்து அசத்தியிருப்பார் நடிகர் நாகேஷ். இந்நிலையில் இந்த ஜாலியோ ஜிம்கானா படத்தில் பிரபுதேவாவும் இறந்த மனிதரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அந்த படத்தில் இருந்து ஒரு நகைச்சுவையான ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி பெரும் பரவிருப்பை பெற்று வருகிறது. வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாகிறது.

Video Top Stories