பூனை மலத்தில் இருந்து தயாரிக்கப்படும் இந்த காபி தான் உலகின் மிகவும் விலை உயர்ந்த காபி!

உலகின் மிக விலையுயர்ந்த காபியான கோபி லுவாக், சிவெட் பூனையின் மலத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

World s most expensive coffee Kopi Luwak, which is made from cat poop Rya

உலகின் மிக விலையுயர்ந்த காபி என்று அழைக்கப்படும் இந்தோனேசியாவின் கோபி லுவாக், உலகளவில் கவனம் ஈர்த்து வருகிறது. காபி பிரியர்களுக்கு கட்டாயம் கோபி லுவாக்கைப் பற்றி தெரிந்திருக்கும். ஆம். உலகின் மிக விலையுயர்ந்த காபியைப் பற்றி தான் நாம் குறிப்பிடுகிறோம், இது உலகின் நான்கைந்து நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது. அதில் இந்தியாவும் ஒன்று,

மிகவும் விலையுயர்ந்த காபி இப்படித்தான் தயாரிக்கப்படுகிறது

நாம் உலகின் மிக விலையுயர்ந்த காபி சிவெட் பற்றி பேசுகிறோம். ஆம், சிவெட் காபி தான் உலகின் விலை உயர்ந்த காபி. இந்த காபி செடிகளில் இருந்து தயாரிக்கப்படுவதில்லை, பூனையின் மலத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மையில், இந்த பூனை காபி விதைகளை சாப்பிடுகிறது. ஆனால் அது பூனையின் வயிற்றில் செரிமானம் ஆகாது.. அதன் பிறகு, காபி கொட்டைகள் பூனை அதை மலம் வழியாக வெளியேறுகிறது. மக்கள் அதை சேகரித்து அரைத்து உலகின் விலையுயர்ந்த காபியை உருவாக்குகிறார்கள். இந்த காபி மிகவும் விலை உயர்ந்தது.

குழந்தைகளுக்கு பால் நல்லதா? தயிர் நல்லதா? தெரிஞ்சுக்க இதை படிங்க!

இது உலகின் சில நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது. பல இடங்களில் சுண்டைக்காய் கிலோ, ஒரு லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆன்லைனில் தேடினால் கிலோ இருபது முதல் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை கிடைக்கும். இது தவிர, சிறிய பேக்குகளிலும் கிடைக்கிறது. இந்தியாவில், இது கோபி லுவாக் காபி என்றும் அழைக்கப்படுகிறது. 

 சிவெட் காபி செர்ரிகளின் சதையை உண்ணும் போது, ​​விலங்குகளின் வயிற்றில் உள்ள இயற்கை என்சைம்கள் அந்த காபி கொட்டைகளின் சுவையை அதிகரிக்கிறது. பூனையின் மலம் வழியாக வெளியேறும் அந்த காபி கொட்டைக்கள் பின்னர் பதப்படுத்தப்பட்டு, வழக்கமான சோதனைக்குப் பிறகு, தொகுக்கப்படுகிறது. 

இந்த செயல்பாட்டின் போது, சிவெட்டின் செரிமான அமைப்பு பீன்ஸ் கலவையை மாற்றியமைக்கிறது என்று கூறப்படுகிறது, மேலும் இது காபிக்கு அதன் தனித்துவமான சுவையை அளிக்கிறது. இது காபிக்கு மிகவும் மிருதுவான சுவையை அளிப்பதாகவும், பாரம்பரிய காபியை விட கசப்பு குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிவெட் பூனையின் செரிமானப் பாதை வழியாக வெளியேறுவதால் அது சத்தானதாக மாறுகிறது. இதுவே இந்த காபியின் அதிக விலைக்கும் காரணம்

இருப்பினும், மற்ற நாடுகளை பொறுத்த வரை, சிவெட்டுகள் கூண்டில் அடைக்கப்பட்டு வலுக்கட்டாயமாக உணவளிக்கப்படுகின்றன, ஆனால் இந்தியா மிகவும் இயற்கையான முறையைப் பயன்படுத்துகிறது. கூர்க் மற்றும் சாமராஜ்நகரில் உள்ள காடுகளின் விளிம்பில் இருக்கும் காபி தோட்டங்களிலிருந்து காட்டு சிவெட் பூனைகளின் கழிவு சேகரிக்கப்படுகிறது. 

டீயும் பிஸ்கட்டும் சாப்பிட நல்லா தான் இருக்கும்! ஆனா இந்த ஆபத்தான பிரச்சனைகள் வரும்!

சில நேரங்களில் இந்த காபியின் விலை ஒரு கிலோவிற்கு 1,300 அமெரிக்க டாலர்கள் வரை செலுத்த வேண்டும். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.1,10,000 ரூபாய். இந்த விலை காரணமாக இது விலை உயர்ந்த காபியாக கருதப்படுகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios