Chithha OTT: நயன்தாரா 'இறைவன்' படத்தையே அலற விட்ட... சித்தார்த்தின் ‘சித்தா’ புதிய ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளை குவித்த, 'சித்தா' படத்தின் புதிய ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
chithha
தென்னிந்திய திரையுலகில், தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சித்தார்த், மிகவும் அழுத்தமான மற்றும் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த 'சித்தா' படத்தில் நடித்திருந்தார்.
chithha
இயக்குனர் அருண்குமார் இயக்கி இருந்த இந்த படத்தை, நடிகர் சித்தார்த் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார். இதற்கு காரணம், இப்படத்தின் கதை மீதும் சித்தா படத்தின் கதாபாத்திரத்தின் மீதும் அவருக்கு இருந்த அபரிவிதமான நம்பிக்கை எனலாம்.
Chithha Movie
எப்போதும் சிறந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும், என்பதை சித்தா திரைப்படமும் நிரூபித்தது. ரஜினி - கமல் போன்ற ஜாம்பவான்கள் இந்த படத்தை பார்த்து விட்டு, மனதார பாராட்டினர். இப்படம் குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை பாலியல் துன்புறுத்தல் போன்ற முக்கிய சமூகப் பிரச்சினைகளை அழுத்தமாக பேசும் கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் திரையுலகில் இதுவரை திரையில் பேசப்படாத சில முக்கியமான விஷயங்களை இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டிய இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் இந்த படம் ஏற்கனவே டிஸ்னி + ஹாட் ஸ்டார் தளத்தில், நவம்பர் 17-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் சில காரணங்களால் வெளியாகாமல் போனது.
siddharth
இதை தொடர்ந்து, இந்த படத்தை இந்த வாரம் நவம்பர் 28-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் இப்படத்தை ஓடிடி தளத்தில் ஆவலுடன் பார்க்க காத்திருக்கும் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது. இப்படம் பெண் குழந்தைகள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும், பார்க்க வேண்டிய படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D