Mansoor Ali Khan: த்ரிஷா குறித்த பேச்சு... நடிகர் மன்சூர் அலிகான் மீது இரண்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு!
நடிகை த்ரிஷா குறித்து, அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளிம் கீழ் நுங்கம்பாக்கம், மற்றும் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Trisha
தென்னிந்திய திரையுலகில், முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் திரிஷாவுக்கு வயது 40 ஐ நெருங்கிவிட்டாலும், இன்றளவும் அவருக்கான தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தொடர்ந்து, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவரை... பற்றி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்த 'லியோ' படத்தில், நடிகர் மன்சூர் அலிகானும், இருதயராஜ் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திருஷாவுடன் தனக்கு ஒரு காட்சி கூட இல்லை என்பதை, மிகவும் மோசமான விதத்தில் மன்சூர் அலிகான் வெளிப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மன்சூர் அலிகான் பற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானதை பார்த்து விட்டு த்ரிஷா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில், நடிகை குஷ்பூ, ரோஜா, லோகேஷ் கனகராஜ், உள்ளிட்ட பல பிரபலங்கள் தன்னுடைய ஆதரவை அவருக்கு தெரிவித்தனர்.
மேலும் நடிகர் சங்கம், இந்த விஷயம் தொடர்பாக மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், கூறியது. இன்று நடிகர் பாரதி ராஜாவும் மன்சூர் அலிகான் நிச்சயம் மன்னிப்பு கேட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கூறியது. இப்படி, தொடர்ந்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த விஷயம் குறித்து, தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது பழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
mansoor ali khan
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் நடிகர், மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி டிஜிபிக்கு அறிவுறுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல் W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று நடிகர் மன்சூர் அலிகான் மீது 354 (A), 509 இதச ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
Rachitha: ரக்ஷிதா மகாலட்சுமி இப்படி பட்ட பெண்ணா? தினேஷை பிரிய காரணம் இது தான்... கண்ணீர் விட்ட தாய்!