பயிற்சி, டிராவல் என்று இந்திய அணிக்கான டி20 உலகக் கோப்பை ஜெர்சி அறிமுகம்!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி நேற்று வெளியிடப்பட்டது. இதில், ரோகித் சர்மா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

India New T20 World Cup Jersey
ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாள், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், கனடா, உகாண்டா, பப்புவா நியூ கினியா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
India New T20 World Cup Jersey
இந்த 20 அணிகளும் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த ஏப்ரல் 30 அம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
India New T20 World Cup Jersey
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரிஷப் பண்ட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிவம் துபே, அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா.
India New T20 World Cup Jersey
மேலும், ரிசர்வ் பிளேயர்ஸாக ரிங்கு சிங், சுப்மன் கில், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியில் ஏதேனும் மாற்றம் செய்ய நேர்ந்தால் மே 25 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
India New T20 World Cup Jersey
இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் 5ஆம் தேதி நியூயார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா விளையாடும் குரூப் சுற்று போட்டிகள் அமெரிக்காவிலேயே நடத்தப்பட இருக்கிறது.
India New T20 World Cup Jersey
கடந்த சில தினங்களுக்கு முன்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்ஸி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலமாக பறந்து வந்த ஜெர்சியில் ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை என்று மூவர்ணமும் காலரில் இடம் பெற்றிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வீடியோவில் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் 3 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
India New T20 World Cup Jersey
கடந்த 7 ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் டி20 ஜெர்சி விற்பனைக்கு வந்தது. ஆன்லைன் மற்றும் அடிடாஸ் கடைகளில் விற்பனைக்கு வந்தது. ஜெர்சியின் விலை ரூ.5,999 என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம் செய்யப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
India New T20 World Cup Jersey
இதில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் கலந்து கொண்டு ஜெர்சியை அறிமுகம் செய்தனர். இதில், பயிற்சிக்கு அணிந்து கொள்ள ஒரு கிட்டும், டிராவல் செய்யும் போது அணிந்து கொள்ள ஒரு கிட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.
India New T20 World Cup Jersey
விளையாடும் போது அணிந்து கொள்ளும் டி20 ஜெர்சி தான் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, பயிற்சிக்கு அணிந்து கொள்ளும் ஜெர்சியில் நீலம் மற்றும் மஞ்சள் நிறம் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், அந்த ஜெர்சியை பார்த்தால் ஆஸ்திரேலியா ஜெர்சியைப் போன்று தெரிகிறது. பயணம் செய்வதற்கான அணியின் ஜெர்சியானது கருப்பு மற்றும் வெள்ளை நிறம் இடம் பெற்றிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.