- Home
- Gallery
- Amala Paul : நிறைமாத நிலவே வா வா.. நடைபோடு மெதுவா மெதுவா! அமலா பாலின் க்யூட்டான கர்ப்பகால போட்டோஷூட் இதோ
Amala Paul : நிறைமாத நிலவே வா வா.. நடைபோடு மெதுவா மெதுவா! அமலா பாலின் க்யூட்டான கர்ப்பகால போட்டோஷூட் இதோ
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை அமலா பால் நடத்திய கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

amala paul
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். மைனா படம் மூலம் பேமஸ் ஆன இவர் அடுத்தடுத்து விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். டாப் ஹீரோயினாக வலம் வரும்போதே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து கரம்பிடித்தார் அமலா பால். இருப்பினும் அவரது திருமண வாழ்க்கை நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
amala paul photoshoot
ஏ.எல்.விஜய் உடனான பிரிவுக்கு பின்னர் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய அமலா பால், ஆடை என்கிற திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சி கொடுத்தார். அதன் பின்னர் கோலிவுட்டில் அவருக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கினார் அமலா பால்.
இதையும் படியுங்கள்... Singer Suchitra : தனுஷ் ஒரு பூமரு... ஐஸ்வர்யா அவனைவிட மோசம்... டார் டாராக கிழித்து தொங்கவிட்ட பாடகி சுசித்ரா
amala paul pregnancy
இதனிடையே கடந்தாண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய பிறந்தநாள் அன்று தன்னுடைய காதலனை அறிமுகம் செய்த அமலா பால், அடுத்த வாரமே அவரை திருமணமும் செய்துகொண்டார். கேரளாவில் சிம்பிளாக நடைபெற்ற அமலா பாலின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த அடுத்த மாதமே தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் அமலா பால்.
amala paul pregnancy Photoshoot
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமலா பால், தற்போது கர்ப்பகால போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். வெள்ளை நிற கவுன் அணிந்து வயிற்றில் குழந்தையோடும் வாய் நிறைய புன்னகையோடும் போஸ் கொடுத்தபடி அமலா பால் நடத்தியுள்ள இந்த அழகிய போட்டோஷூட் பார்த்த ரசிகர்கள் அதற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். சிலரோ குழந்தை நலமுடன் பிறக்க அமலா பாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... தனுஷ் - ஐஸ்வர்யா முதல் ஜிவி பிரகாஷ் - சைந்தவி வரை.. குழந்தை பிறந்த பின் விவாகரத்து செய்த பிரபலங்கள் லிஸ்ட் இதோ