MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Singer Suchitra : தனுஷ் ஒரு பூமரு... ஐஸ்வர்யா அவனைவிட மோசம்... டார் டாராக கிழித்து தொங்கவிட்ட பாடகி சுசித்ரா

Singer Suchitra : தனுஷ் ஒரு பூமரு... ஐஸ்வர்யா அவனைவிட மோசம்... டார் டாராக கிழித்து தொங்கவிட்ட பாடகி சுசித்ரா

பாடகி சுசித்ரா, நடிகர் தனுஷ் பற்றியும் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பற்றியும் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : May 14 2024, 09:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Suchitra

Suchitra

ரேடியோவில் ஆர்.ஜே,வாக பணியாற்றி வந்த சுசித்ரா, கடந்த 2002-ம் ஆண்டு வெளிவந்த லேசா லேசா படம் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். இதையடுத்து மன்மதன், காக்க காக்க, ஜே ஜே, வல்லவன், போக்கிரி, பொல்லாதவன் என வரிசையாக இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதற்கு முக்கிய காரணம் சுசித்ராவின் காந்தக் குரல் தான். இவர் பாடகியாக மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
BiggBoss Fame Suchitra

BiggBoss Fame Suchitra

திருட்டுப்பயலே படத்தில் மாளவிகா, கந்தசாமி படத்தில் ஸ்ரேயா, மங்காத்தா படத்தில் லட்சுமி ராய் போன்றவர்களுக்கு டப்பிங் பேசியது சுசித்ரா தான். இதுதவிர ஜே ஜே, ஆயுத எழுத்து, பலே பாண்டியா போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார் சுசித்ரா. இப்படி பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்த சுசித்ரா, கடந்த 2016-ம் ஆண்டு சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் மிகப்பெரிய புயலை கிளப்பினார். அதில் நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் போன்ற பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களும் லீக் ஆனது.

35
singer suchitra

singer suchitra

அதன்பின்னர் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போன சுசித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்றார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகராகவும் பணியாற்றி வந்த சுசித்ரா, சமீபத்திய பேட்டியில், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து உள்ளார்.

இதையும் படியுங்கள்... தனுஷ் - ஐஸ்வர்யா முதல் ஜிவி பிரகாஷ் - சைந்தவி வரை.. குழந்தை பிறந்த பின் விவாகரத்து செய்த பிரபலங்கள் லிஸ்ட் இதோ

45
Suchitra, Dhanush

Suchitra, Dhanush

அதில் அவர் கூறியதாவது : “மக்களின் அனுதாபம் தனுஷ் பக்கம் தானே உள்ளது. ஐஸ்வர்யா பக்கம் சுத்தமா கிடையாது. ஏனெனில் அவள் சிறந்த தாய் இல்லை. அவரோடு ஒப்பிடுகையில் தனுஷ் சிறந்த தந்தையாக இருக்கிறார். ஐஸ்வர்யா ஒரு அம்மாவாக இருந்து பெரிதாக என்ன செய்துவிட்டார். எப்போதும் தன்னையே புரமோட் செய்துகொண்டு இருப்பார். தனுஷ் எனக்கு எதிராக பிராங்க் செய்தாலும் அவனது திருமண வாழ்வில் நடக்கும் விஷயத்தில் அவன் தான் கரெக்டா இருக்கான். நான் தனுஷின் ஜென்ம எதிரி இல்ல. எனக்கு எதிரா அவன் பிராங்க் பண்ணிருக்கான், அவனை நான் அப்புறமா கவனிச்சிக்கிறேன். அவன் கை கால உடைச்சிட்டு ஜெயிலுக்கு போகவும் தயாரா இருக்கேன் என கூறி இருக்கிறார்.

55
Aishwarya Dhanush

Aishwarya Dhanush

தொடர்ந்து பேசிய சுசித்ரா, தனுஷ் 90ஸ் கிட் மாதிரி நடந்துகொள்வதாக கூறினார், அவன் ஒரு பூமரு, அவனுக்கு கொஞ்சம் கூட மெச்சூரிட்டி கிடையாது. ஐஸ்வர்யா, ரவீனா தாஹா மாதிரி நடந்துக்கிறா. திடீர்னு டைரக்ட் பண்ணுவாங்களாம், நடிப்பாங்களாம், டான்ஸ் ஆடுவாங்களாம். இதுவரைக்கு தனுஷா அவளை அடக்கி வச்சிருந்தான் அவளுடைய திறமையை. விவாகரத்துக்கு அப்பறம் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக காட்டிக்கொள்கிறாரா என அடுக்காடுக்கான கேள்விகளை முன்வைத்து இருக்கிறார் சுசித்ரா. அவரின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்...  Vettaiyan Wrap: வேட்டையன் படப்பிடிப்பை நிறைவு செய்த தலைவர்..! பூ கொத்து கொடுத்து வழியனுப்பிய படக்குழு!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தனுஷ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved