10 ஆண்டுகளுக்கு பிறகு 3ஆவது முறையாக தகுதிச் சுற்றுக்கு முன்னேறிய கேகேஆர் சாம்பியனாகுமா?
10 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 3ஆவது முறையாக ஐபிஎல் முதல் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

IPL 2024 GT vs KKR
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது விளையாடிய 12 போட்டிகளில் 8ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
IPL 2024 GT vs KKR
எஞ்சிய 3 போட்டிகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் போட்டி போட்டன. இதில் குஜராத் விளையாடிய 12 போட்டிகளில் 5 வெற்றி 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று 8ஆவது இடத்தில் இருந்தது.
IPL 2024 GT vs KKR
எஞ்சிய 2 போட்டிகள் முறையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அப்படி வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்து குஜராத் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அமைய இருந்தது.
IPL 2024 GT vs KKR
இந்த நிலையில், தான் நேற்று அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 63ஆவது லீக் போட்டி நடைபெற இருந்தது. ஆனால், அகமதாபாத்தில் பெய்த கனமழையின் காரணமாக இந்தப் போட்டி டாஸ் போட முடியாமல் ரத்து செய்யப்பட்டது.
IPL 2024 GT vs KKR
மேலும், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் 11 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. இதே போன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 19 புள்ளிகள் பெற்று முதல் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
IPL 2024 GT vs KKR
இதற்கு முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் முறையாக முதல் தகுதிச் சுற்றுக்கு சென்றது. இதில், டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக சாம்பியனானது.
IPL 2024 GT vs KKR
இதே போன்று 2014 ஆம் ஆண்டு 2ஆவது முறையாக முதல் தகுதிச் சுற்றுக்கு முன்னேறி 2அவது முறையாக சாம்பியனானது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றது. இறுதிப் போட்டியிலும் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியனானது.
IPL 2024 GT vs KKR
இதையடுத்து தற்போது 3ஆவது முறையாக முதல் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக முதல் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டைப் போன்று 2024 ஆம் ஆண்டும் சாம்பியன் டிராபியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.