'வேட்டையன்' ஷூட்டிங் முடித்துவிட்டு குழுவினருடன் கலகலப்பாக பேசிய தலைவர் ரஜினிகாந்த்
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் வரும் அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்ட நிலையில் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vettaiyan Rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடிக்கும் 'வேட்டையன்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தை முடித்துக்கொடுத்த தலைவர் ரஜினிக்கு பூங்கொத்து கொடுத்து விடை கொடுத்தனர்.
Vettaiyan Shoot
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Vettaiyan
170வது திரைப்படமான வேட்டையன் படத்தில் ஒரு நட்சத்திரப் பட்டாளமே களம் இறக்கப்பட்டுள்ளது. ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரக்ஷன் எனப் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
Vettaiyan Rajini with Amitabh
ரஜினிகாந்த் வரும் அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டதாக, லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது. விரைவில் இப்படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Rajini
இந்நிலையில், படப்பிடிப்பு களத்தில் ரஜினிகாந்த் வெப்சீரிஸ் இயக்குநர் நந்தினி மற்றும் படக்குழுவினருடன் உரையாடும் வீடியோ சமூக ஊடகத் தளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.