- Home
- Cinema
- சிவாங்கியின் லேட்டஸ்ட் க்ரஷ் இவர்தானா? மேடையிலேயே ஓப்பனாக சொன்ன 'குக் வித் கோமாளி' பிரபலம் - ரசிகர்கள் கிண்டல்!
சிவாங்கியின் லேட்டஸ்ட் க்ரஷ் இவர்தானா? மேடையிலேயே ஓப்பனாக சொன்ன 'குக் வித் கோமாளி' பிரபலம் - ரசிகர்கள் கிண்டல்!
Sivaangi Krishnakumar Crush on Asif Ali : விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான சிவாங்கி கிருஷ்ணகுமார் தனக்கு யார் மீது க்ர்ஷ் இருக்கிறது என்று அவர்களது லிஸ்ட்டை பட்டியலிட்டுள்ளார்.

Sivaangi Krishnakumar Crush List 2026, சிவாங்கியின் க்ரஷ் லிஸ்ட் 2026
Sivaangi Krishnakumar Crush on Asif Ali : சிறந்த பின்னணி பாடகியும், நடிகையுமான சிவாங்கி தனக்கு யாரை பிடிக்கும் என்று ஒரு லிஸ்டை பட்டியலிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று தனது அழகான குரலால் ரசிகர்களை மட்டுமின்றி நடுவர்களையும் கவர்ந்தார். அவர்களுக்கு செல்லப்பிள்ளையாகவும் ஆனார். சினிமாவிலும் அன்பாலே அழகாக்கும் என்ற பாடல் மூலமாக சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகம் கொடுத்தார்.
Malayalam Actor Asif Ali and Sivaangi News, நடிகர் ஆசிஃப் அலி மற்றும் சிவாங்கி செய்தி
கலைமாமணி பட்டம் பெற்ற பாடகர்களான கிருஷ்ணகுமார் மற்றும் உன்னி கிருஷ்ணகுமார் ஆகியோரது மகள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வலம் வந்தார். இதில் முதல் சீசன் முதல் தனது வெகுளியான பேச்சால் ரசிகர்களை கவர்ந்தார். சின்னத்திரையில் அடுத்தடுத்த உயரம் தொட்ட சிவாங்கி வெள்ளித்திரையிலும் சிவகார்த்திகேயன், வடிவேலு ஆகியோருடன் ஒரு சில படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.
Sivaangi Krishnakumar cute comments about marriage, திருமணம் பற்றி சிவாங்கியின் க்யூட் கமெண்ட்ஸ்
இப்படியெல்லாம் பிரபலமான சிவாங்கி ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தன்னை உயர்த்திக் கொண்டார். பாடகி, நடிகை, சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்னு பல முகங்கள் இவருக்கு இருக்கு. சமீபத்துல கேரளாவில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் சிவாங்கி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் 'உங்களுக்கு யார் மீது க்ரஷ் இருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த 'சிவாங்கி ஜாலியா ஒரு பெரிய லிஸ்ட்டையே சொல்லியிருக்காங்க.
Cook with Comali Sivaangi latest updates, குக் வித் கோமாளி சிவாங்கி அப்டேட்ஸ்
"ஃபர்ஸ்ட் உன்னி முகுந்தன், செகண்ட் த்ருவ் விக்ரம். மூணாவதா மலையாளத்துல நிறைய பேர் இருக்காங்க. ஆசிஃப் அலி... அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சு, ஆனாலும் பரவாயில்லை. அதுக்கப்புறம் சந்தீப், 'படக்களம்' சந்தீப். ஒருவேளை சந்தீப் இங்க வந்தா, 'நான் உங்க பெரிய ஃபேன், உங்க 'படக்களம்' படம் எனக்கு ரொம்ப பிடிச்சது.
Also Read This : Rashmika Mandanna: விமர்சனங்களை படிக்கல்லாக மாற்றிய ராஷ்மிகா! தன்னை காயப்படுத்தியவர்களுக்கு மௌனத்தால் பதிலடி கொடுத்தது எப்படி?
Sivaangi Krishnakumar singing and acting projects, சிவாங்கியின் இசை மற்றும் நடிப்புப் பணிகள்
குறிப்பா அந்த மூணு ரோல் எனக்கு ரொம்ப இஷ்டம். அதைப் பார்த்து எனக்கு என்னமோ ஆயிடுச்சு'ன்னு சொல்வேன்," அப்படின்னு சிவாங்கி சிரிச்சுக்கிட்டே சொல்லியிருக்காங்க. இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2022-ல் வெளியான 'டான்' படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது குக் வித் கோமாளி தான்.
Asif Ali family and wife details, ஆசிஃப் அலி குடும்பம் மற்றும் மனைவி விவரம்
ஆசிஃப் அலி மீதான ஈர்ப்பு: மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஆசிஃப் அலி மீது தனக்கு நீண்ட நாட்களாக ஒரு க்ரஷ் இருப்பதாகச் சிவாங்கி தெரிவித்துள்ளார்.
கல்யாணம் ஆயிடுச்சு, ஆனா...: "அவருக்குத் திருமணமாகி குழந்தைகள் இருப்பது எனக்குத் தெரியும், இருந்தாலும் அவர் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு (Liking) உண்டு" எனத் தனது வழக்கமான க்யூட் பாணியில் சிவாங்கி கூறியுள்ளார்.
க்ரஷ் லிஸ்ட்: ஆசிஃப் அலியைத் தாண்டி மற்ற மொழி நடிகர்கள் மற்றும் பாடகர்கள் சிலரும் தனது க்ரஷ் லிஸ்டில் இருப்பதாக அவர் அந்தப் பேட்டியில் ஜாலியாகப் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்களின் ரியாக்ஷன்: சிவாங்கியின் இந்தப் பேச்சைக் கேட்டு, "சிவாங்கி எப்போதுமே எதார்த்தமானவர்" என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹார்ட்டின்களைப் பறக்கவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.