150 கோடி வீட்டில்.. குறையாத காதலுடன் அம்மாவுடன் அப்பா.. பாச மழை பொழியும்.. கியூட் புகைப்படம் வெளியிட்ட தனுஷ்!
நடிகர் தனுஷ் தன்னுடைய பெற்றோர் புகைப்படத்தை வெளியிட்டு, உங்கள் பெற்றோரும் இப்படி சிரித்துக்கொண்டிருக்க வேண்டும் என, பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்பதை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் தனுஷ். இவர் முதல் முதலாக இயக்கிய பா.பாண்டி திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போது தன்னுடைய 50-ஆவது படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
தமிழ் முதல் முறையாக மொட்டைத் தலையுடன் நடிக்கும் இந்த படத்திற்கு 'ராயன்' என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தாலும், இதுவரை படக்குழு அதிகார பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. இந்த படத்தில், துஷாரா விஜயன், சுதீப், காளிதாஸ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
Actor Dhanush
இதை தொடர்ந்து தன்னுடைய 51-ஆவது படத்தை, பிரபல பாலிவுட் பட இயக்குனர், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள, 'கேப்டன் மில்லர்' திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
நடிப்பில் படு பிசியாக இருந்தாலும், அவ்வப்போது சமூக வலைத்தளத்திலும் தன்னுடைய மனதிற்கு நெருக்கமான தருணங்களின் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள தனுஷ், தற்போது... தன்னுடைய, அம்மா - அப்பா இருவரும் 150 கோடி செலவு செய்து இவர் கட்டி உள்ள வீட்டில், அழகான காதலுடன் சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட, அந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D