80s Buildup Day 1 Collection: சந்தானத்தின் 80ஸ் பில்டப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகர் சந்தானம் நடிப்பில் நேற்று வெளியான 80ஸ் பில்டப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குள் என்ட்ரி கொடுத்த நடிகர் சந்தானம், ஆரம்பத்தில் காமெடி நடிகராக திரையுலகில் கலக்கிய நிலையில்... பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவர் நடித்த தில்லுக்கு துட்டு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுநிலையில், பின்னர் முழு நேர ஹீரோவாக மாறினார்.
தொடர்ந்து ஹீரோ சப்ஜெக்ட் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் சந்தானம் நடிப்பில், இந்த ஆண்டு வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து வெளியான 'கிக்' திரைப்படம் சுமாரான வெற்றியை கண்ட நிலையில், தற்போது 80ஸ் கெடப்பில் சந்தானம் நடித்துள்ள '80ஸ் பில்டப்' திரைப்படம் நேற்று வெளியானது.
santhanam
இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், பிரபுதேவாவை வைத்து குலேபகாவாலி, ஜோதிகாவின் ஜாக்பாட், ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கி உள்ளார்.
rathika preethi
இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக 'பூவே உனக்காக' தொடரில் நடித்த நடிகை ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், கே எஸ் ரவிக்குமார், முனீஸ் காந்த், ரெடிங் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், சுந்தர்ராஜன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கதை கதத்தில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர், ட்ரைலர், போன்றவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... நேற்று வெளியான இப்படம் ஒரு தரப்பினர் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தாலும், மற்றொரு தரப்பினர் சில இடங்களில் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை என்பது போல் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நேற்று ஒரே நாளில்,1.2 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால், இப்படத்தின் வசூல் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D