MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அமிதாப் வேடத்தில் நடிக்க வேண்டியவர் அவர் தான்; வேட்டையன் ஆடியோ லாஞ்சில் ரஜினி உருக்கம்!

அமிதாப் வேடத்தில் நடிக்க வேண்டியவர் அவர் தான்; வேட்டையன் ஆடியோ லாஞ்சில் ரஜினி உருக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, வேட்டையன் பட ஆடியோ லான்ச் இன்று நடந்த நிலையில்... ரஜினிகாந்த் அமிதாப் பச்சன் வேடத்தில் நடிக்க வேண்டிய நடிகர் பற்றிய தகவலை கூறியுள்ளார். 

1 Min read
Author : manimegalai a
Published : Sep 21 2024, 12:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vettaiyan Movie

Vettaiyan Movie

ரஜினிகாந்தின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும், 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் களைகட்ட துவங்கியுள்ளது. அந்த வகையில், இன்று சென்னை வேப்பேரில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் 'வேட்டையன் படத்தின் ஆடியோ லான்ச் மிக பிரமாண்டமாக நடந்தது.

25
Vettaiyan Movie Cast

Vettaiyan Movie Cast

இதில் இந்த படத்தில் நடித்த ரஜினிகாந்த் உட்பட, நடிகை மஞ்சு வாரியார், ரோகினி, இயக்குனர் ஞானவேல், துஷாரா விஜயன் ராணா மற்றும் ஏராளமான நடிகர் - நடிகைகள் கலந்து கொண்டனர். அதே போல் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரஜினிகாந்தை தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கையை பிடித்து உள்ளே அழைத்து வந்தார். 

'வேட்டையன்' ஆடியோ லாஞ்சில் புகுந்த போலி டிக்கெட்! 500-க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு!

35
Vettaiyan Audio Launch Controversy:

Vettaiyan Audio Launch Controversy:

மேலும் அனிரூத் லைவ் பர்ஃபாமென்ஸ் செய்து அசர வைத்தார். 2000-திற்கும் அதிகமான ரசிகர்கள் அரங்கத்தின் உள்ளே திரண்ட நிலையில்... ஏராளமான ரசிகர்களுக்கு உள்ளே இடம் இல்லாத காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சம்பவம் ஆடியோ லான்ச் நடக்கும் இடத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. 

45
Rajinikanth About Director Gnanavel

Rajinikanth About Director Gnanavel

இது ஒருபுறம் இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆடியோ லான்ச் விழாவில் ரசிகர்கள் மத்தியில் பேசிய விஷயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பணிகள் துவங்கும் போதே இயக்குனர், ஞானவேலிடம்... "நமக்கு மெசேஜ் சொல்றதுலாம் செட் ஆகாது.. படம் கமர்ஷியலா  இருக்கணும்.. மக்கள் கொண்டாடனும்.. அப்படின்னு ரஜினிகாந்த் கூறிவிட்டாராம். அதே போல் இந்த படவிழாவில், மனக்கஷ்டத்துடன் ஒரு தகவலையும் பகிர்ந்து கொண்டார். 

'வேட்டையன்' ஆடியோ லான்ச்..! வீறுநடை போட்டு வந்த ரஜினிகாந்த் - வைரல் வீடியோ!

55
Rajinikanth Speech Vettaiyan Audio Launch

Rajinikanth Speech Vettaiyan Audio Launch

ஒருவேளை, சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால்... அமிதாப்பச்சன் கேரக்டரில் அவர் தான் நடித்திருக்க வேண்டியது என பேசும் போது அங்காரமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கை தட்டி வரவேற்றனர். இதை கூறும் போது ரஜினிகாந்தின் மன வருத்தமும் வெளிப்பட்டது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தெலங்கானாவில் அங்கீகரிக்கப்பட்ட உலக நாயகன்! கமல்​ஹாசன், ராஷ்மிகா மந்தனாவுக்கு விருது.!
Recommended image2
சுக்குநூறாய் உடையும் விஜயாவின் ஈகோ... வீட்டுக்கு கம்பேக் கொடுக்கும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image3
யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் யார் தெரியுமா? வாயடைத்துப் போன கோலிவுட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved