- Home
- Cinema
- Ashwin Kumar : பிளாக்பஸ்டர் இயக்குநரின் பேத்தியா இது... அஸ்வின் குமார் திருமணம் செய்த புவனேஸ்வரி யார் தெரியுமா?
Ashwin Kumar : பிளாக்பஸ்டர் இயக்குநரின் பேத்தியா இது... அஸ்வின் குமார் திருமணம் செய்த புவனேஸ்வரி யார் தெரியுமா?
Ashwin Kumar Wedding Photos : குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஃபேமஸ் ஆன அஸ்வின் குமார், தன்னுடைய காதலியான புவனேஸ்வரியை கரம்பிடித்துள்ளார். அவரின் திருமண புகைப்படங்கள் வைரலாகின்றன.

Ashwin Kumar weds Bhuvaneshwari
சின்னத்திரையில் அறிமுகமாகி, பின்னர் வெள்ளித்திரையில் கதாநாயகனாக வளர்ந்தவர் நடிகர் அஸ்வின் குமார். விஜய் டிவியில் கடந்த 2013-ம் ஆண்டு ஒளிபரப்பான ‘ஆபிஸ்’ சீரியல் மூலம் தனது சின்னத்திரைப் பயணத்தைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு ஒளிபரப்பான ‘ரெட்டைவால் குருவி’ தொடரில் நடிகராக அறிமுகமானார். இந்த சீரியல் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் கதாநாயகனாக நடித்து கவனம் பெற்றார்.
குக் வித் கோமாளி பிரபலம்
சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சினிமாவிலும் தனது பயணத்தைத் தொடங்கினார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். இப்படி சினிமா, சின்னத்திரையில் நடித்திருந்தாலும் அஸ்வினுக்கு மிகப்பெரிய பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அதன் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, அதில் தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தினார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் கிடைத்தனர்.
அஸ்வின் குமார் சந்தித்த பின்னடைவு
குக் வித் கோமாளிக்கு பிறகு, அஸ்வினுக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. அதன்படி 2022-ம் ஆண்டு வெளியான ‘என்ன சொல்லப் போகிறாய்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அஸ்வின். அப்படத்தின் ஆடியோ லாஞ்சில் அவர் பேசிய பேச்சு அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. தான் பல இயக்குநர்களிடம் கதை கேட்டு தூங்கியதாக கூறி இருந்தார். இதனால் அவர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். பின்னர் சில ஆண்டுகள் இடை வெளிக்கு பின்னர் ‘செம்பி’ படத்தில் நடித்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ திரைப்படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
திருமண பந்தத்தில் இணைந்த அஸ்வின் குமார்!
இந்நிலையில், நடிகர் அஸ்வின் குமார் இன்று (நவம்பர் 20) புவனேஸ்வரி என்பவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் கோவையில் இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த பலரும் அஸ்வினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
யார் இந்த புவனேஸ்வரி?
அஸ்வின் குமாரின் திருமண புகைப்படங்களைப் பார்த்ததும் பலரும் கேட்டது அவரது மனைவி புவனேஸ்வரி யார் என்பது தான். அஸ்வினின் மனைவி புவனேஸ்வரி, மறைந்த பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான ராஜசேகரின் பேத்தி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. புவனேஸ்வரியின் தாத்தா ராஜசேகர் ரஜினியின் படிக்காதவன், 1986ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்களது திருமணம் குறித்த செய்திகள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.














