'வேட்டையன்' ஆடியோ லாஞ்சில் புகுந்த போலி டிக்கெட்! 500-க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'வேட்டையன்' படத்தின் ஆடியோ லான்ச்சில் போலி டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையால் பரபரப்பு ஏற்பட்டது.
Vettaiyan Audio Launch
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு, எப்போதுமே ரசிகர்கள், ஏகோபித்த வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில்... ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' திரைப்படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு நிலவி வருகிறது. இந்த படம் அடுத்த மாதம், அதாவது அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
Vettaiyan Audio Launch
இந்நிலையில் இன்று 'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 1000 முதல் 1500 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
'வேட்டையன்' ஆடியோ லான்ச்..! வீறுநடை போட்டு வந்த ரஜினிகாந்த் - வைரல் வீடியோ!
Vettaiyan Audio Launch
ஆனால் எதிர்பாராத விதமாக, டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டதை விட அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் நேரு ஸ்டேடியத்தில் குவிந்ததாக கூறப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்தது. 500-க்கும் மேற்பட்டோர் கைகளில் டிக்கெட் வைத்திருந்த போதும், அவர்களை போலீசார் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Vettaiyan Audio Launch
ரஜினிகாந்தை நேரில் பார்க்க வேண்டும், இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகளை நேரில் பார்க்க வேண்டும் என்கிற ஆவலோடு தமிழகம் மட்டும் அல்லாது ஆந்திரா கேரளா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் காசு செலவு செய்து டிக்கெட் வாங்கியும் அவர்களை உள்ளே விடாதது பலரை கோவத்தில் ஆழ்த்தியது. இதனால் சிலர் அங்கிருந்த போலீசாரிடம் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.
பெங்களூரில் புதிய வீடு வாங்கி... கிரஹப்பிரவேசம் செய்த நடிகை மிருணாளினி ரவி! வைரல் போட்டோஸ்!
Vettaiyan Audio Launch
ரசிகர்கள் செய்வதறியாது நின்ற நிலையில் காவல்துறையினர், பட தயாரிப்பு நிறுவனத்தை அணுகிய போது, அரங்கம் முழுமையாக நிரம்பிவிட்டது என்றும் இனி யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என கூறிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே ரசிகர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர். ஒரு சிலரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர். அதே நேரம் ரசிகர்கள் கையில் டிக்கெட்டுடன் வாதித்ததால், போலி டிக்கெட் மூலம் சிலர் உள்ளே சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமானின், மியூசிக் கான்செர்ட் சென்னையில் நடந்த போது... இதே போன்ற போலி டிக்கெட் சர்ச்சை எழுந்தது தொடர்ந்து மீண்டும் ரஜினி படத்திற்கு போலி டிக்கெட் பிரச்சனையால் பல ரசிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.