அடேங்கப்பா... ஒரு நாளைக்கு 15 கோடி சம்பளமா? காஸ்ட்லி வில்லனாக உருவெடுத்த கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசன், ஹீரோவாக நடிக்க வாங்கும் சம்பளத்தைவிட வில்லனாக நடிக்க டபுள் மடங்கு சம்பளம் வாங்கி இருக்கிறார். அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Villain Kamal haasan Salary
நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் கல்கி 2 திரைப்படமும் ஒன்று. பிரபாஸ் நாயகனாக நடித்த கல்கியின் இரண்டாம் பாகம் தான் இது. நாக் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் கேரக்டர் முதல் பாகத்தில் ஒரு கேமியோ போல் அமைந்திருந்தாலும், இரண்டாம் பாகத்தில் மிகப்பெரிய அளவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கல்கி 2 படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்திற்காக கமல் பெறும் சம்பளம் குறித்து நடிகர் யூகி சேது பேசி இருக்கிறார்.
கமல் சம்பளம்
கல்கி 2 படத்திற்காக 20 நாட்கள் நடிக்க கமலுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. சாரோட பிறந்தநாளுக்கு, 'இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நீங்கதான்' என்று சொன்னேன். ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டாலர் சம்பாதிக்கிறீங்கன்னு சொன்னேன். உடனே அவர் என்னை கல்கி தயாரிப்பாளர் அஸ்வினி தத்திடம் அழைத்துச் சென்றார். நான் அவரிடமும் இதையே சொன்னேன். அதற்கு அவர், 'கமல் சார் வெறும் 10 நாட்கள் தான் கால்ஷீட் கொடுத்தார்' என்றார். அப்படியானால், ஒரு நாளைக்கு இரண்டு மில்லியன் டாலர் கமல் சார் சம்பாதிக்கிறார்.
கல்கி 2 கமல்
கல்கி 2898 ஏடி என்ற முழுப் பெயருடன் இந்தத் திரைப்படம் ஜூன் 27, 2024 அன்று வெளியானது. கல்கி உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் 739 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. தற்போது கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் பாகத்தில் அமிதாப் பச்சனின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. பிரபாஸ் படத்தில் கமல்ஹாசன் சுப்ரீம் யாஸ்கின் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார்.
கல்கி 2 அப்டேட்
கல்கி 2 திரைப்படத்தில் கமல்ஹாசன், பிரபாஸ் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த தீபிகா படுகோன் அதன் இரண்டாம் பாகத்தில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதிலாக நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கல்கி முதல் பாகத்தைப் போல் அதன் இரண்டாம் பாகத்திலும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

