- Home
- Cinema
- கல்கி 2-வில் தீபிகா படுகோனுக்கு பதில் சாய் பல்லவி? ரெளடி பேபிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு
கல்கி 2-வில் தீபிகா படுகோனுக்கு பதில் சாய் பல்லவி? ரெளடி பேபிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு
சாய் பல்லவிக்கு ஒரு பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் கல்கி 2 படத்தில் தீபிகா படுகோன் இடத்தில் நடிக்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.

Sai Pallavi in Kalki 2
நேச்சுரல் பியூட்டியால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சாய் பல்லவி. பெரும்பாலும் மேக்கப் இல்லாமல் நடிப்பவர். அற்புதமான நடிப்பு மற்றும் நடனத்தால் அனைவரையும் ஈர்க்கிறார். இந்நிலையில், சாய் பல்லவிக்கு ஒரு பான் இந்தியா அளவில் ஒரு பம்பர் ஆஃபர் வந்துள்ளது. பிரபாஸ் நடித்த 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோனுக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்கவுள்ளாராம்.
தீபிகா படுகோனுக்கு பதில் சாய் பல்லவி
கால்ஷீட், சம்பளம் போன்ற காரணங்களால் தீபிகா விலகியதாக படக்குழு கடந்த ஆண்டு அறிவித்தது. தீபிகா விலகியதால், அந்த இடத்திற்கு சாய் பல்லவி தேர்வாகியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சாய் பல்லவியின் உலகளாவிய புகழை அதிகரிக்கும். சாய் பல்லவி தற்போது பாலிவுட்டில் 'ராமாயணா' படத்தில் சீதையாக நடிக்கிறார். ரன்பீர் கபூர் ராமனாகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர்.
பான் இந்தியா நாயகியான சாய் பல்லவி
நிதீஷ் திவாரி இயக்கும் இப்படம் படப்பிடிப்பில் உள்ளது. 'ராமாயணா' இரண்டு பாகங்களாக வெளியாகிறது. இது தவிர, ரஜினிகாந்த் நடிக்கும் படத்திலும் சாய் பல்லவி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. மேலும் இந்தியில் 'ஏக் தின்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி கல்கி 2 படம் மூலம் பான் இந்தியா நாயகியாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்கி 2
கல்கி 2 திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பிரபாஸ் உடன் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மூலம் முதன்முறையாக பிரபாஸ் உடன் இணைந்து நடிக்க இருக்கிறார் சாய் பல்லவி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

