MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்ன விளையாடுறியா? இதை நாலு செவுத்துக்குள்ள வச்சுக்கய்யா! விஜய்யை கடுமையாக எச்சரித்த சமுத்திரக்கனி

என்ன விளையாடுறியா? இதை நாலு செவுத்துக்குள்ள வச்சுக்கய்யா! விஜய்யை கடுமையாக எச்சரித்த சமுத்திரக்கனி

தனிப்பட்ட விஷயங்களை நான்கு சுவர்களுக்கு வெளியே கொண்டுவர வேண்டுமா? யாரை நோக்கி பழிவாங்குகிறீர்கள் என நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி பேசிய வீடியோ வைரலாகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 08 2026, 02:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Samuthirakani Slams Thalapathy Vijay
Image Credit : X

Samuthirakani Slams Thalapathy Vijay

ஏஜிஎஸ் குழும திருமண விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இணைந்து கலந்துகொண்டது திரையுலகில் பரவலான கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், சென்னை எம்ஆர்சி நகர் பகுதியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'டெக்ஸ்லா' திரைப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைபெற்றது. இயக்குநர் பாலா, நடிகர் சமுத்திரக்கனி, சீமான், இயக்குநர் ஆர்வி உதயகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

24
விஜய்யை விமர்சித்த சமுத்திரக்கனி
Image Credit : PTI

விஜய்யை விமர்சித்த சமுத்திரக்கனி

நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர், அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் குறித்த உரையாடல் எழுந்தது. அப்போது நடிகர் சமுத்திரக்கனி வெளிப்படையாக தனது அதிருப்தியை பதிவுசெய்தார். "இது என்ன விளையாட்டு? இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கின்றன. தனிப்பட்ட விஷயங்களை நான்கு சுவர்களுக்கு வெளியே கொண்டுவர வேண்டுமா? யாரை நோக்கி பழிவாங்குகிறீர்கள்? எல்லாமே சரியான பாதையில் சென்றுகொண்டிருந்தது. இப்போது கட்சியிலேயே ஆதரவாளர்கள் விலகுகிறார்கள்" என்று ஆதங்கத்துடன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Articles

Related image1
Now Playing
விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
Related image2
ரகசிய சிநேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவால் வெடித்த சர்ச்சை
34
ஆதங்கப்பட்ட சமுத்திரக்கனி
Image Credit : stockPhoto

ஆதங்கப்பட்ட சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி ஆதங்கத்தோடு பேசுகையில் இயக்குனர்கள் ஆர்வி உதயகுமார், பாலா ஆகியோர் அருகில் இருந்தார்கள். அண்மையில் இயக்குநர் அமீரும் விஜய்யின் இந்த நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து இருந்தார். மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டு அவர் மகளிர் தினம் கொண்டாடியதை கடுமையாக தாக்கி பதிவிட்டு இருந்தார் அமீர். இப்படி சினிமா வட்டாரத்திலேயே நடிகர் விஜய்யின் நடவடிக்கைகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன. இதனால் அவரின் அரசியல் கெரியரில் இது பேரிடியாக அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

44
விஜய்க்கு பின்னடைவு
Image Credit : X

விஜய்க்கு பின்னடைவு

ஆனால் மகளிர் தின விழாவில் பேசுகையில், இந்த சர்ச்சைகள் எல்லாம் நினைத்து நீங்க ஃபீல் பண்ண வேண்டாம் என தன்னுடைய ரசிகர்களிடம் கேட்டுக் கொண்ட விஜய், அந்த பிரச்சனைகள் அவ்வளவு ஒர்த் ஆனவை இல்லை. நம்மோ மக்கள் பணியில் நம்முடைய கவனத்தை செலுத்துவோம் என கூறி இருந்தார். அவர் சங்கீதாவை ஒரு பொருட்டாகவே கருதாதீர்கள் என பேசி இருப்பது மேலும் விவாத பொருளாக மாறி இருக்கிறது. இந்த விவாகரத்து விவகாரம் விஜய்யின் அரசியல் கெரியரை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பது அடுத்த மாதம் நடைபெற உள்ள எலெக்‌ஷனில் தெரிந்துவிடும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
திரிஷா
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஜியின் ஆட்டம் ஆரம்பம்... கதிருக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image2
தெலங்கானாவில் அங்கீகரிக்கப்பட்ட உலக நாயகன்! கமல்​ஹாசன், ராஷ்மிகா மந்தனாவுக்கு விருது.!
Recommended image3
சுக்குநூறாய் உடையும் விஜயாவின் ஈகோ... வீட்டுக்கு கம்பேக் கொடுக்கும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Related Stories
Recommended image1
Now Playing
விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
Recommended image2
ரகசிய சிநேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவால் வெடித்த சர்ச்சை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved