பெரியாரை தொடாமல் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது; விஜய்க்கு வாழ்த்து சொன்ன உதயநிதி

தமிழகத்தில் பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது. அரசியல் கட்சி தொடங்கி உள்ள நண்பர் விஜய்க்கு வாழ்த்துகள் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

Velmurugan s  | Published: Sep 18, 2024, 6:12 PM IST

தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது. அந்த வகையில் பெரியாருக்கு மரியாதை செலுத்திய நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துகள் என்றார்.

மேலும் அவரிடம் துணைமுதல்வர் பதவி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், தொண்டர்கள் அவர்களது விருப்பத்தை முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். முடிவு முதல்வருடையது தான். எதுவாக இருந்தாலும் அமைச்சர்கள் அனைவரும் முதல்வருக்கு துணையாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Read More...

Video Top Stories