அவளுக்கு அறிவே இல்ல.. பட்டா தான் புத்தி வரும்! அடிக்கடி ஜோவிகா மொக்கை வாங்கும் விஷயத்துக்கு சாபம் விட்ட வனிதா!
பிக்பாஸ் சீசன் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள வனிதாவின் மகள் ஜோவிகா அடிக்கடி மொக்கை வாங்கி வரும், ஒரு விஷயத்திற்காக வனிதா சாபம் விடுவது போல் பேசியுள்ளார்.
vanitha vijayakumar BB
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளாவுக்கு மூத்த மகளாக பிறந்தவர் வனிதா விஜயகுமார். இவர் 90களில் தளபதி விஜயுடன் சந்திரிகா உட்பட சில படங்களில் மட்டுமே நடித்த நிலையில், பின்னர் தன்னுடைய காதலர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
Vanitha Vijayakumar
திருமணத்திற்கு பின்னர், சில வருடம் மட்டுமே ஆகாஷ் வனிதா தம்பதி ஒன்றாக வாழ்ந்த நிலையில், ஜோவிகா பிறந்ததுமே ஆகாஷ் இடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். பின்னர் ஆனந்த் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டருடன் காதல் சர்ச்சையில் சிக்கியவர்.
பெற்றோர் கைவிட்ட நிலையில், தனியாக வசித்து வந்த இருக்கும் மீண்டும் கம் பேக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, விளையாடிய பின்னர்... ஒரு பக்கம் விஜய் டிவி அடுத்தடுத்த வாய்ப்புகளை அள்ளிக்கொடுக்க, மற்றொருபுறம் திரைப்படங்கள், சீரியல் வாய்ப்புகளையும் கைப்பற்றி நடிக்க துவங்கினார்.
கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு வனிதா பண்ணிய அளப்பறைகளுக்கு அளவே இல்லை. இந்த வாழ்க்கையும் சில மாதங்களில் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது தன்னுடைய குடும்பம், ஷூட்டிங், பிஸ்னஸ் என பொறுப்பான வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
வனிதாவின் மகள் ஜோவிகா விரைவில் நடிகையாக அறிமுகமாக உள்ளதாக, ஏற்கனவே வனிதா அறிவித்த நிலையில், தற்போது... மகளை மேலும் பிரபலமாக்க பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய ஜோவிகா ... தற்போது வேகம் குறைந்து, கடமைக்காக விளையாடி வருவது போல் தெரிகிறது. இதற்க்கு முக்கிய காரணம் ஜோதிகா மாயா - பூர்ணிமாவின் புல்லி கேங்கில் இணைந்தது தான்.
மேலும் மகளை எச்சரிக்கும் விதமாக சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்கிற கேப்ஷனுடன் டீ-ஷர்ட் ஒன்றியும் அனுப்பி வைத்து, மகளுக்கு எச்சரிக்கை கொடுத்தார் வனிதா. இந்நிலையில் பிக்பாஸ் குறித்து விமர்சனம் செய்து வரும், ஊடகத்தில்... தன்னுடைய மகள் அடிக்கடி கீழே விழுந்து மொக்கை வாங்கி வரும் விஷயம் குறித்து பேசியுள்ளார்.
Vichithra: விசித்ரா சொல்வது சுத்த பொய்.. எல்லாம் பக்கா பிளான்! பகீர் கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்!
"ஜோவிகாவுக்கு அறிவே இல்லை என்றும், வீட்டில் இருந்து காருக்கு செல்வதாக இருந்தாலும் சரி, ஆலம்பாக்கத்தில் உள்ள என்னுடைய அப்பா வீட்டில் இருக்கும் போதும் சரி.. எந்நேரமும் ஓடிக்கொண்டே இருப்பார். அவளுக்கு ஓடுவது என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் பலமுறை ஓடாதே கீழே விழுந்து விடுவாய் என சொல்லி பார்த்துவிட்டேன் அதை மட்டும் அவர் செய்யவே மாட்டார். விழுந்து நல்ல அடிபடட்டும் அப்போதான் அவளுக்கு புத்தி வரும் என சாபம் விடுவது போல் பேசியுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பெத்த மகள பத்தி இப்படியா பேசுவீங்க? என வனிதாவை செல்லமாக கடிந்து கொண்டுள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D