ஷூட்டிங் ஒரு பக்கம்.. டப்பிங் ஒரு பக்கம்.. அனல் பறக்கும் Thug Life - STR தந்த அப்டேட்!
STR Thug Life : பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வரும் திரைப்படம் தான் Thug Life.

str 48
"கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிம்பு தனது 48வது திரைப்படத்தை நடிக்க உள்ளார் என்கின்ற தகவல்கள் கடந்த ஆண்டு வெளியானது. மேலும் அந்த படத்திற்கான பணிகளும் ஜோராக நடைபெற்று வந்தது. ஆனால் இப்போது அந்த திரைப்பட பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சினிமாவுக்கு வரலனா என்ன ஆகிருப்பேன் தெரியுமா? தனது லட்சிய கனவை பற்றி பேசிய நயன்தாரா!
str
இதற்கிடையில் உலக நாயகன் கமல்ஹாசன் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கும், பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் "தக் லைஃப்" என்கின்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. தொடர்ச்சியாக அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளிலும் அவர் பங்கேற்றார்.
maniratnam
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக சிம்பு நடிப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் உலக நாயகன் கமல்ஹாசனோடு முதல் முறையாக நடிகர் சிம்பு இந்த திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளார். கமலின், மகன் கதாபாத்திரத்தில் சிம்பு Thug Life படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
str in thug life
இந்தியாவின் பல பகுதிகளில் Thug Life திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து வரும் அதே நேரத்தில், தனக்கான படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ள சிம்பு இப்போது டப்பிங் பணிகளை துவங்கி உள்ளார். ஷூட்டிங் மற்றும் டப்பிங் என்று Thug Life திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருவது இதன் மூலம் தெரிகிறது.