MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Shriya Saran: ரஜினிகாந்த் கொடுத்த அட்வைஸ்! நாகார்ஜூனா சொல்லி கொடுத்த விஷயம்.. தொடர்ந்து ஃபாலோ பண்ணும் ஸ்ரேயா!

Shriya Saran: ரஜினிகாந்த் கொடுத்த அட்வைஸ்! நாகார்ஜூனா சொல்லி கொடுத்த விஷயம்.. தொடர்ந்து ஃபாலோ பண்ணும் ஸ்ரேயா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், சிவாஜி படத்தில் நடிக்கும் போது அவர் கொடுத்த அறிவுரையை தற்போது வரை பின்பற்றி வருவதாக நடிகை ஸ்ரேயா சரண் கூறியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Mar 16 2024, 03:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

திருமணம் ஆகி, பெண் குழந்தைக்கு தாயான பின்னரும், தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் ஸ்ரேயா சரண். இவர் தற்போது ஷோடைம் என்கிற ஓடிடி வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

விரைவில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ள இந்த தொடர், திரைத்துறையில் இருக்கும் நடிகர் - நடிகைகள் திரைமறைவில் சந்திக்கும் போராட்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த வெப் தொடரின் புரமோஷன் பணியில் கலந்து கொண்ட, ஸ்ரேயா சரண் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த அட்வைஸ் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆத்தி நீங்களுமா.? கவர்ச்சி கோதாவில் இறங்கிய அதிதி ஷங்கர்! குட்டை கவுனில் அடிக்கிற லூட்டியை நீங்களே பாருங்கள்!

36

இன்ஸ்டன்ட் பாலிவுட் என்கிற இணையத்திற்கு அளித்த பேட்டியில் ஸ்ரேயா சரண் கூறியுள்ளதாவது, ஒரு நடிகையாக நான் அறிமுகமாகும் போது, பல பிரச்சனைகளையும், போராட்டங்களையும் சந்தித்துள்ளேன். ஒரு முறை பயத்தில் படப்பிடிப்பில் இருந்து கூட ஓடி விட்டேன் என கூறியுள்ளார்.
 

46

'கந்தசாமி' படத்தில் நான் நடிக்கும் போது, என்னால் பல டேக் எடுக்கப்பட்டது. அதனை விக்ரம் சகித்து கொண்டார். இதை எப்போதுமே நான் மறக்க மாட்டேன். அவர் நீங்கள் குழப்பம் அடைந்தால் அது முழு செட்டையும் பாதிக்கும் என்கிற உண்மையை புரிய வைத்தார். இதுவே என்னை நான் மாற்றிக்கொள்ள உறுதுணையாக இருந்த முதல் வார்த்தை என்று கூறினார்.

Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார்னா சும்மாவா? 50 வினாடி விளம்பத்தில் நடிக்க... பிக் பேமெண்ட் கேட்கும் நயன்தாரா!

56

அதே போல் நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி போன்ற சில புத்திசாலித்தனமான நடிகர்களுடன் நான் பணியாற்றும் போது, அவர் சுற்றியுள்ள அனைத்தையும் நிர்வகிக்க தியானம் உதவியாக இருக்கும் என்று எனக்குக் கற்றுக் கொடுத்தார். 
 

66
Rajinikanth

Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன், சிவாஜி படத்தில் நான் நடித்த போது எனக்கு ஒரு சிறந்த அறிவுரை கொடுத்தார். "இன்று நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். வெற்றி படங்களை கொடுத்து வருகிறீர்கள். நாளை நிலைமை மாறி நீங்கள் தோல்விகளை சந்திக்கலாம். ஆனால் எப்போதும் மக்களை நன்றாக நடத்துங்கள். அவர்களிடம் அன்பாக இருங்கள் என்று கூறினார். இதை நான் அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருகிறேன் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகினி பற்றி மனோஜுக்கு தெரிய வந்த உண்மை.! வெளியே வந்த விஜயாவின் சுயரூபம்! சிறகடிக்க ஆசை அப்டேட்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நாகார்ஜுனா
நடிகர் விக்ரம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved