- Home
- Gallery
- நடிகைகளுடன் நெருக்கம் காட்டிய GV பிரகாஷ்.. சண்டைபோட்ட சைந்தவி; விவாகரத்துக்கான காரணத்தை போட்டுடைத்த பயில்வான்
நடிகைகளுடன் நெருக்கம் காட்டிய GV பிரகாஷ்.. சண்டைபோட்ட சைந்தவி; விவாகரத்துக்கான காரணத்தை போட்டுடைத்த பயில்வான்
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும், பின்னணி பாடகி சைந்தவியும் விவாகரத்து பெற உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கான காரணத்தை பயில்வான் கூறி இருக்கிறார்.

Saindhavi, GV Prakash
ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரஹேனாவின் மகன் தான் ஜிவி பிரகாஷ் குமார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இதையடுத்து விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்த ஜிவி பிரகாஷ் குமார் கடந்த 2013-ம் ஆண்டு பின்னணி பாடகி சைந்தவியை திருமணம் செய்துகொண்டார்.
GV Prakash Saindhavi marriage
சைந்தவியும் ஜிவி பிரகாஷும் பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த 2013-ம் ஆண்டு சைந்தவியை கரம்பிடித்தார் ஜிவி பிரகாஷ். இவர்கள் காம்போவில் ஏராளமான ஹிட் பாடல்களும் வெளிவந்துள்ளன. இந்த ஜோடிக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அன்வி என பெயரிட்டனர். இப்படி ஜாலியாக சென்றுகொண்டிருந்த ஜிவி பிரகாஷின் திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் படியுங்கள்... Amala Paul : நிறைமாத நிலவே வா வா.. நடைபோடு மெதுவா மெதுவா! அமலா பாலின் க்யூட்டான கர்ப்பகால போட்டோஷூட் இதோ
GV Prakash Saindhavi Divorce
இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக விவாகரத்து செய்து பிரிய முடிவெடுத்துள்ளதாக ஜிவி பிரகாஷ் - சைந்தவி இருவருமே அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்களின் விவாகரத்து விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. அவர்கள் விவாகரத்துக்கான காரணம் என்ன என்பது தான் பலரின் கேள்வியாகவும் இருந்து வந்தது. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், ஜிவி பிரகாஷ் விவாகரத்துக்கான காரணத்தை கூறி இருக்கிறார்.
GV Prakash Kumar Divorce
அதன்படி ஜிவி பிரகாஷ் சினிமாவில் நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பது பிடிக்காமல் போனதால் அவருடன் அடிக்கடி சண்டைபோட்டு வந்தாராம் சைந்தவி. கடந்த நான்கு ஆண்டுகளாகவே இருவர் இடையேயும் கருத்துவேறுபாடு இருந்ததாக கூறிய பயில்வான் ரங்கநாதன், ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இருவரையும் அழைத்து சமாதானப்படுத்த முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்ததாக கூறி இருக்கிறார்.
Bayilvan says about GV Prakash Saindhavi Divorce
மேலும் இருவருக்கும் இடையே பிரச்சனை அதிகமானதால் அடிக்கடி வெளியே தங்க ஆரம்பித்தாராம் ஜிவி பிரகாஷ். இதனால் இருவரிடையேயும் விரிசல் பெரிதாகி தற்போது விவாகரத்து பெறும் நிலைக்கு வந்துள்ளதாக கூறிய பயில்வான், அவர்கள் இருவரும் இந்த முடிவை கைவிட்டு மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... தனுஷ் - ஐஸ்வர்யா முதல் ஜிவி பிரகாஷ் - சைந்தவி வரை.. குழந்தை பிறந்த பின் விவாகரத்து செய்த பிரபலங்கள் லிஸ்ட் இதோ