தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் திமுக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
11:41 PM (IST) Aug 14
தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சம்பவத்தில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10:49 PM (IST) Aug 14
முன்னதாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
10:31 PM (IST) Aug 14
தனக்கு ப்ளட் பிரசர், நெஞ்சுவலி உள்ளிட்ட உடல் ரீதியான பிரச்சனைகள் இருப்பதாக கேபி, ராமலிங்கம் தெரிவித்தையடுத்து, பாஜக முன்னாள் எம்பி கே.பி. ராமலிங்கம் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
10:27 PM (IST) Aug 14
கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றியுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.
08:29 PM (IST) Aug 14
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடித்துள்ள திரைப்படம் 'விருமன்'. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், ராஜ்கிரண், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
07:41 PM (IST) Aug 14
10ம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் 60% க்கு மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தாட்கோவில் பதிவு செய்த மாணவர்கள் சென்னை ஐஐடி, நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
07:19 PM (IST) Aug 14
முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மட்டுமே அனைத்து துறைகளையும் கவனித்து வந்தனர். மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாததை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தனர்.
06:10 PM (IST) Aug 14
அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியும், விடுதலையின் 75-ஆம் ஆண்டு பவளவிழாவில் தேசியக் கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சட்டப்படியான நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும்.
05:37 PM (IST) Aug 14
இந்தியாவின் வாரன் பஃபெட்’ என அழைக்கப்படுகிறார். தனது கல்லூரி காலத்திலேயே பங்குச்சந்தையில் நாட்டம் கொண்ட ராகேஷ், 1985ஆம் ஆண்டில் ரூ.5,000 பங்குச்சந்தையில் முதலீடு செய்தார்.
05:26 PM (IST) Aug 14
எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் தேசிய காசநோய் நிறுவனத்திலும் காலியாக உள்ள செவிலியர் அதிகாரிகள் பதவிகளுக்கான NORCET எழுத்துத் தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க
05:18 PM (IST) Aug 14
திமுகவின் உட்கட்சி தேர்தல் பல மாவட்டங்களில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தங்களது ஆதரவாளர்களுக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் செயல்படுவதால் அதிருப்தி அடைந்துள்ள மூத்த நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு செல்ல தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
05:16 PM (IST) Aug 14
தமிழ்நாடு நிதியமைச்சரை குறிவைத்து பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம்! என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
05:16 PM (IST) Aug 14
தமிழ்நாடு மாநில பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாதா கோயிலுக்குள் முறைகேடாக நுழைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்
04:17 PM (IST) Aug 14
இந்தியாவின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பினை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
03:46 PM (IST) Aug 14
பானையில் இருந்து தண்ணீர் குடித்த 9 வயது பட்டியலின சிறுவனை ஆசிரியர் ஷாயில் சிங் சரமாரியாக தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
03:04 PM (IST) Aug 14
கார்த்தி நடித்துள்ள விருமன் படம் ரிலீசாகி உள்ள போதும், சீதா ராமம் படமும் பாக்ஸ் ஆபிஸில் மவுசு குறையாமல் வசூலித்து வருகிறது. இந்நிலையில், சீதா ராமம் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை படக்குழுவே வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
02:42 PM (IST) Aug 14
இந்தியாவின் அழுத்தத்தை தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு இப்போது அதன் நிலையை மாற்றிக் கொண்டு நாளை மறுநாள் சீன உளவுக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரை அனுமதித்திருப்பதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
01:34 PM (IST) Aug 14
கிளை மேலாளர், ஊழியர் ஆகிய இருவரையும் கத்தி காட்டி மிரட்டி, தாக்கியுள்ளது அந்த கும்பல் . மேலும் பாதுகாப்பு பெட்டக அறையின் சாவியை பெற்று, இருவர்களது கை, கால்களை கட்டி வாயில் துணியை வைத்து, கழிப்பறையில் அடைத்துள்ளனர். பின்னர், பாதுகாப்பு அறையை திறந்து அங்கிருந்த 16 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.மேலும் படிக்க
12:58 PM (IST) Aug 14
நிதியமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்டது விரும்பத்தகாத சம்பவம். அது தவறு. அமைதியை விரும்பும் கட்சியான பாஜகவில் இதபோல நடந்தது வருத்தமளிக்கிறது. நான் முன்பே விமான நிலையம் வந்திருந்தால் சம்பவத்தை நடக்கவிடாமல் தடுத்திருப்பேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
12:52 PM (IST) Aug 14
டெல்லியில் வரும் 17ம் தேதி பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரையும் முதல்வர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார்மேலும் படிக்க
12:34 PM (IST) Aug 14
சேலம் ஆர்.ஆர்.பிரியாணிக் கடையில் வாங்கிய மட்டன் பிரியாணியில் புழு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஊழியர்களிடம் முறையிட்ட போது அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
12:21 PM (IST) Aug 14
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பை கழட்டி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், பாஜக பெண் நிர்வாகி ஒருவர் செருப்பை கழற்றி வீசும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
12:14 PM (IST) Aug 14
தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர், வீசப்பட்ட செருப்பு பத்திரமாக இருக்கிறது என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் மேலும் அதில் அவர், நேற்று நடந்த சம்பவத்தைப் பற்றி நான் பிறகு கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
12:11 PM (IST) Aug 14
மருதநாயகம் பட வசனம் சினிமாவிற்காக எழுதிய வசனம் அல்ல. என் உள்ளத்தில் இருந்த தீ. அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தாய் நிலத்தை மீட்க களம் இறங்கிய ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருந்த தீ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க
11:28 AM (IST) Aug 14
கல்விக்கும் மருத்துவத்திற்கும் செலவு செய்வது இலவசம் ஆகாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூரில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய அவர், இலவசம் வேறு, நலத்திட்டம் வேறு என்றும் கல்விக்கும் மருத்துவத்திற்கும் செலவு செய்வது இலவசம் ஆகாது என்றும் உச்சநீதிமன்ற கூறியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.
11:27 AM (IST) Aug 14
மதுரை நகர், மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.
11:25 AM (IST) Aug 14
நேற்றைய தினம் மதுரை விமான நிலையத்தில் யாருமே விரும்பாத கசப்பான சம்பவம் நடைபெற்றுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். விரும்பத்தகாத செயலில் பாஜக தொண்டர்கள் ஈடுபட்டது வேதனையளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார். மருத்துவர் சரவணன் வேதனையை வெளிப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.
11:20 AM (IST) Aug 14
பாப்பாரப்பட்டியில் கடந்த 11ம் தேதி பாரதமாதா நினைவாலையத்தின் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த பாஜக நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
11:13 AM (IST) Aug 14
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், வரும் 21 ஆம் தேதி வரை விஐபி தரிசனத்தை ரத்து செய்து திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக திருப்பதீ கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்துள்ளனர். இதனால் இலவச தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 48 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க
11:09 AM (IST) Aug 14
முதல் படம் தோல்வியை சந்தித்தாலும் அடுத்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு தனது அடுத்த படத்திற்கான கதையை கேட்டு வருகிறாராம் சரவணன். மேலும் படிக்க
10:41 AM (IST) Aug 14
இந்திய சந்தைகளின் முகங்களில் ஒருவராக அறியப்படும் முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆகஸ்ட் 14 ஆம் தேதி தனது 62 வயதில் இறந்தார். தலால் தெருவின் 'பிக் புல்' என்றும் அழைக்கப்பட்டு வந்தார். இன்று தனது கடைசி மூச்சை இழந்தார். மேலும் படிக்க
10:34 AM (IST) Aug 14
தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறை வாகனம் உடைக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக, ஆட்டோ , பைக்குகள், போலீஸ் வாகனங்கள் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
10:34 AM (IST) Aug 14
அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளி முருகனின் உறவினர் சக்திவேலை பிடித்து போலீசார் விசாரணை நடதத்தி வருகின்றனர்.
10:28 AM (IST) Aug 14
இந்தியாவின் வாரன் பப்பெட் என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
09:52 AM (IST) Aug 14
மும்பை பங்குச் சந்தையில் பங்குகளின் முன்னோட்டத்தை கணித்து பிரம்மாவாக திகழ்ந்து வந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா திடீரென மரணம் அடைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் உடல் நலக்குறைவு காரணமாக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
09:41 AM (IST) Aug 14
நடிகர் விஜய் சேதுபதி அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் மட்டுமே வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளதாகவும், இதுதவிர அவர் வேறு எந்த தெலுங்கு படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை என்றும் அவர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.மேலும் படிக்க
09:12 AM (IST) Aug 14
நேற்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட நிலையில் இரவு 12 மணிக்கு பாஜக நிர்வாகி சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
08:52 AM (IST) Aug 14
ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நிதி அமைச்சர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதுரையில் விரும்ப தகாத நிகழ்வை தூண்டியதே டாக்டர் சரவணன் தான் என பாஜக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
08:31 AM (IST) Aug 14
முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்திய விருமனுக்கு, இரண்டாம் நாளிலும் அதே நிலை தான் நீடித்தது. அதுமட்டுமின்றி நேற்று விடுமுறை தினம் என்பதால் பெரும்பாலான இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாகவே ஓடியது மேலும் படிக்க
07:55 AM (IST) Aug 14
Suriyan Peyarchi 2022 Palangal: சிம்ம ராசியில் சூரியன் பெயர்ச்சி வரும் 2022 ஆம் ஆண்டு இறுதி வரை, இந்த ராசிக்காரர்களுக்கு பரிபூரண அருளை வழங்குவார்.இதனால் யாருக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம்.