MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மருதநாயகம் படத்துக்காக பேசிய டயலாக்கை முதல்முறையாக வெளியிட்டு... கமல் சொன்ன வித்தியாசமான சுதந்திர தின வாழ்த்து

மருதநாயகம் படத்துக்காக பேசிய டயலாக்கை முதல்முறையாக வெளியிட்டு... கமல் சொன்ன வித்தியாசமான சுதந்திர தின வாழ்த்து

KamalHaasan : மருதநாயகம் பட வசனம் சினிமாவிற்காக எழுதிய வசனம் அல்ல. என் உள்ளத்தில் இருந்த தீ. அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தாய் நிலத்தை மீட்க களம் இறங்கிய ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருந்த தீ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 14 2022, 11:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், “75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் என் மனப்பூர்வமான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்க விழாவில், பிரிட்டிஷ் மகாராணி முன்னிலையில் படமாக்கப்பட்ட காட்சியில், "ஒரு கடலையோ காற்றையோ, காட்டையோ குத்தகைக்கோ, வாடகைக்கோ, சொந்தம் கொண்டாடவோ முடியும் எனும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது? இந்த மரத்தின் வயது இருக்குமா உங்களுக்கு? யார் நீங்கள்? இது என் நாடு. என் தகப்பனின் சாம்பலின் மீது நான் நடக்கிறேன். நாளை என் சாம்பலின் மீது என் மகன் நடப்பான்” எனும் வசனத்தைப் பேசினேன். 

23

இது சினிமாவிற்காக எழுதிய வசனம் அல்ல. என் உள்ளத்தில் இருந்த தீ. அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தாய் நிலத்தை மீட்க களம் இறங்கிய ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருந்த தீ. என் உளத்தீ இன்னமும் அணையவில்லை. உங்களிடமும் இருக்கும் இந்தத் தீ நீடிக்கும் வரை, நம் வீடும் நாடும் மாநிலமும் ஊரும் தெருவும் சீராகும்.

இதையும் படியுங்கள்... பிரம்மாண்டமாக எடுத்தும் கவுத்திவிட்ட ‘தி லெஜண்ட்’ படம்... அண்ணாச்சிக்கு முதல் படத்திலேயே இத்தனை கோடி நஷ்டமா?

தியாக மறவர்கள் பலர் தங்கள் இன்னுயிரை, சொந்த வாழ்க்கையை, சொத்து சுகங்களை இழந்து பன்னெடுங்காலம் போராடி பெற்றது இந்தச் சுதந்திரம் என்பது நம் வரலாறு. வரலாற்றை மறந்து விட்டால், மீண்டும் அதே நாட்களுக்குத் திரும்ப வேண்டியிருக்கும் என்பதும் வரலாறு, மறவோம் மறவோம் என்று இந்த நாளில் உறுதி கொள்வோம்.

33

தாயகம் காக்க தன்னலம் துறந்த அன்றைய சுதந்திரப் போராட்ட வீரர்களையும், இன்றைய நாளை நாம் இனிதே கொண்டாட எல்லைகளைக் காக்கும் முப்படை வீரர்களையும் நன்றியோடு நினைவுகூர்வோம். இவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம். வீரமும் தியாகமும் யாவர்க்கும் உரியவை. வளர்த்துக்கொள்வோம்" என அந்த அறிக்கையில் கமல் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... கவர்ச்சிக்கு தாவிய லாஸ்லியா.... திடீரென கிளாமர் புகைப்படத்தை பதிவிட்டதால் ஷாக் ஆன ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved