பிரம்மாண்டமாக எடுத்தும் கவுத்திவிட்ட ‘தி லெஜண்ட்’ படம்... அண்ணாச்சிக்கு முதல் படத்திலேயே இத்தனை கோடி நஷ்டமா?
Legend Saravanan : முதல் படம் தோல்வியை சந்தித்தாலும் அடுத்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு தனது அடுத்த படத்திற்கான கதையை கேட்டு வருகிறாராம் சரவணன்.
தமிழ் சினிமாவில் கடந்த மாதம் பரபரப்பாக பேசப்பட்ட படம் என்றால் அது தி லெஜண்ட் திரைப்படம் தான். தொழிலதிபர் சரவணன் அருள் நாயகனாக அறிமுகமான இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தனர். விளம்பரங்களின் மூலம் தனக்கு கிடைத்த பாப்புலாரிட்டி காரணமாக இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிரம்மாண்டமாக எடுத்திருந்தார் சரவணன்.
பிரம்மாண்டமாக எடுத்தது மட்டுமின்றி அப்படத்தை புரமோட் செய்வதிலும் பிரம்மாண்டம் காட்டினார் சரவணன். குறிப்பாக இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிட்டது மட்டுமின்றி, அஜித், விஜய், ரஜினி படங்களுக்கு இணையாக உலகமெங்கும் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டு அதகளப்படுத்தினார்.
இதையும் படியுங்கள்... கவர்ச்சிக்கு தாவிய லாஸ்லியா.... திடீரென கிளாமர் புகைப்படத்தை பதிவிட்டதால் ஷாக் ஆன ரசிகர்கள்
இதோடு இப்படம் கடந்த ஜூலை 28-ந் தேதி ரிலீஸான போது, அன்றைய தினம் அதிகாலை 4 மணி காட்சியும் இப்படத்திற்கு திரையிடப்பட்டது. இவ்வாறு எடுத்தது முதல் வெளியிட்டது வரை பிரம்மாண்டத்தை கடைபிடித்த சரவணனுக்கு இப்படம் பிரம்மாண்ட வெற்றியை கொடுக்கத் தவறி உள்ளது. இப்படம் மொத்தமாக ரூ.12.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
ரூ.45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தி லெஜண்ட் திரைப்படம் ரூ.12.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளதால், முதல் படத்திலேயே லெஜண்ட் சரவணனுக்கு ரூ.30 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல் படம் தோல்வியை சந்தித்தாலும் அடுத்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு தனது அடுத்த படத்திற்கான கதையை கேட்டு வருகிறாராம் சரவணன். விரைவில் அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கே.ஜி.எஃப் டீமிற்காக சுதா கொங்கரா இயக்க உள்ள பிரம்மாண்ட படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ்..!