கே.ஜி.எஃப் டீமிற்காக சுதா கொங்கரா இயக்க உள்ள பிரம்மாண்ட படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ்..!
Keerthy Suresh : தமிழில் மாமன்னன், தெலுங்கில் போலா ஷங்கர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது மேலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக மகாநடி படத்தின் வெற்றிக்கு பின் அவர் கதாநாயகிக்கு முக்கியதுவம் கொண்ட கதையம்சத்தில் நடித்த படங்கள் அனைத்தும் பிளாப் ஆகின. இதனால் அவரது மார்க்கெட்டும் கடும் சரிவை சந்தித்துள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது தமிழில் மாமன்னன் திரைப்படம் உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி. அதேபோல் தெலுங்கில் உருவாகும் போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இது தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.
இதையும் படியுங்கள்.... அம்மாவை நினைத்து ஏங்கும் ஜான்விகபூர்...ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் மகள்களின் உருக்கமான பதிவு
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷுக்கு மேலும் ஒரு பிரம்மாண்ட பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களையும் பிரம்மாண்டமாக தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளார். கதாநாயகியை மையமாக வைத்து தான் இப்படம் உருவாக இருக்கிறது. தற்போது சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வரும் சுதா கொங்கரா அப்படத்தை இயக்கி முடித்த பின்னர், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்.... பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்த ‘விருமன்’... அதுவும் ஒரே நாளில் இத்தனை கோடியா..!