கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா.... திடீரென கிளாமர் புகைப்படத்தை பதிவிட்டதால் ஷாக் ஆன ரசிகர்கள்
Losliya : கவர்ச்சி ரூட்டுக்கு தாவி உள்ளார் நடிகை லாஸ்லியா, இடுப்பு தெரிய போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் நடிகர் கவின் மீது காதல் வயப்பட்ட இவர், அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவருடனான காதலை பிரேக் அப் செய்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகை லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. அதன்படி அவர் நடிப்பில் முதலாவதாக வெளிவந்த படம் பிரெண்ட்ஷிப். இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார் லாஸ்லியா. மலையாள படத்தின் ரீமேக் ஆன இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதையும் படியுங்கள்... ஷாருக்கானுக்கு ஓகே சொல்லிவிட்டு.. அல்லு அர்ஜுனுக்கு அல்வா கொடுத்த விஜய் சேதுபதி! புஷ்பா 2-வில் இருந்து விலகலா?
இதனையடுத்து பிக்பாஸில் தன்னுடன் சக போட்டியாளராக பங்கேற்ற தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்தார் லாஸ்லியா. மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற படத்தின் ரீமேக் ஆக உருவாகி இருந்த இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்திருந்தார். இப்படமும் சமீபத்தில் வெளியாகி பிளாப் ஆனது.
இவ்வாறு தான் நடித்த படங்களெல்லாம் அடுத்தடுத்து பிளாப் ஆகி வருவதனால், கவர்ச்சி ரூட்டுக்கு தாவி உள்ளார் நடிகை லாஸ்லியா. அந்த வகையில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்பதை சூசகமாக அறிவிக்கும் விதமாக அவர் இத்தகைய போட்டோஷூட்டை நடத்தி உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... மருதநாயகம் படத்துக்காக பேசிய டயலாக்கை முதல்முறையாக வெளியிட்டு... கமல் சொன்ன வித்தியாசமான சுதந்திர தின வாழ்த்து