ஷாருக்கானுக்கு ஓகே சொல்லிவிட்டு.. அல்லு அர்ஜுனுக்கு அல்வா கொடுத்த விஜய் சேதுபதி! புஷ்பா 2-வில் இருந்து விலகலா?
Vijay sethupathi : நடிகர் விஜய் சேதுபதி அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் மட்டுமே வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளதாகவும், இதுதவிர அவர் வேறு எந்த தெலுங்கு படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை என்றும் அவர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிசியான நடிகராக வலம் வருகிறார். சமீபகாலமாக இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட இவர் வில்லனாக நடிக்கும் படங்களுக்கு தான் அதிக மவுசு இருக்கிறது. இதன் காரணமாக இவருக்கு வில்லன் வாய்ப்புகளும் குவிந்து வருவதாக கூறப்பட்டது.
குறிப்பாக அவர் அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாகவும், சுகுமார் இயக்க உள்ள புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகவும், இதுதவிர மேலும் ஒரு தெலுங்கு படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாகவும் நடிக்க உள்ளதாகவும், இந்த மூணு படத்திற்காக மட்டும் அவர் ரூ,80 கோடி சம்பளம் வாங்கியதாகவும் சமீபத்தில் தகவல் பரவியது.
ஆனால் இது உண்மையில்லை என விஜய் சேதுபதி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நடிகர் விஜய் சேதுபதி அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் மட்டுமே வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளதாகவும், இதுதவிர அவர் வேறு எந்த தெலுங்கு படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை என்றும் அவர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... Viruman : பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் விருமன்... இரண்டாம் நாளிலும் இம்புட்டு வசூலா?
புஷ்பா பட வாய்ப்பு நழுவியதால், அவர் அப்படத்தின் இரண்டாம் பாகத்திலாவது நடிப்பார் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர் புஷ்பா 2 படத்தில் நடிக்க மறுப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. புஷ்பா 2-வில் இயக்குனர் சுகுமார் சேர்த்துள்ள வில்லன் கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முடிவு செய்து படக்குழு, அவரை அணுகியதாம்.
புஷ்பா 2-வின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் மட்டும் வில்லனாக நடிக்குமாறும், இந்தி பதிப்பில் அந்த கேரக்டரில் மனோஜ் பாஜ்பாய் நடிக்க உள்ளதாகவும் கூறினார்களாம். ஆனால் விஜய் சேதுபதிக்கு இதில் உடன்பாடு இல்லாததால் அவர் அப்படத்தில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்... இது மட்டும் நடந்திருந்தா என் புருஷன காப்பாத்திருக்கலாம்.! வித்யாசாகர் மறைவுக்கு பின் மீனா எடுத்த அதிரடி முடிவு