இது மட்டும் நடந்திருந்தா என் புருஷன காப்பாத்திருக்கலாம்.! வித்யாசாகர் மறைவுக்கு பின் மீனா எடுத்த அதிரடி முடிவு
Actress Meena : நடிகை மீனா உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வந்தவர் மீனா. இவர் கடந்த 2009-ம் ஆண்டு வித்யாசகர் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்கிற குழந்தையும் உள்ளது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
meena
வித்யாசாகரின் மறைவு மீனாவின் குடும்பத்தினரை மட்டுமின்றி தமிழ் திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் மீனாவின் கணவர் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். கணவரின் மறைவால் சோகத்தில் மூழ்கி இருந்த நடிகை மீனா, தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்.
இதையும் படியுங்கள்... “தம்பிராமையா வீட்டின் முன் முற்றுகையிடுவோம்” ... ஜீவி-2 விழா மேடையில் சீமான் எச்சரிக்கை! என்ன காரணம்?
இந்நிலையில், நடிகை மீனா உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது : “ஒரு உயிரை காப்பாற்றுவதை விட சிறந்த விஷயம் வேறு எதுவும் கிடையாது. அப்படி உயிரை காப்பாற்றக்கூடிய ஒரு சிறந்த விஷயம் தான் உடல் உறுப்பு தானம்.
அரியவகை நோயால் அவதிப்படும் பலருக்கு அதன்மூலம் மறுவாழ்வு கொடுக்க முடியும். தனிப்பட்ட முறையில் நானும் அதை அனுபவித்து இருக்கிறேன். எனது கணவர் சாகருக்கும் உடலுறுப்பு தானமாக கிடைத்திருந்தால், என்னுடைய வாழ்க்கையும் மாறி இருக்கும். ஒருவர் உடலுறுப்பு தானம் செய்தால் 8 உயிர்களை காப்பாற்ற முடியும்.
இதையும் படியுங்கள்... ஜாதி, மத பேதமின்றி ஆகஸ்ட் 15-ந் தேதி மறக்காம இதை செய்யுங்க - நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்
அனைவரும் உடலுறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இது தானம் செய்பவர்களுக்கும், அதன்மூலம் பயனடைபவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடையிலான விஷயம் அல்ல. இது சம்பந்தபட்டவர்களின் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடையேயும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
நான் எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழி எடுத்துள்ளேன். நம்முடைய புகழ் நிலைத்து நிற்க இதுவே சிறந்த வழி” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் மீனா. அவரின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் செயலிழந்ததை அடுத்து, அவருக்கு மாற்று உறுப்பு கிடைக்க மீனா பெரிதும் முயன்றார். ஆனால் அது கிடைக்காததால் தான் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அதிதி ‘ஐ லவ் யூ’... இயக்குனர் ஷங்கர் மகளை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்