அதிதி ‘ஐ லவ் யூ’... இயக்குனர் ஷங்கர் மகளை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்
தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ள நடிகர் ஒருவர், விருமன் படத்தை பார்த்த பின்னர், தான் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதியை காதலிப்பதாக கூறி பேட்டி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் இயக்குனர் ஷங்கர். அவரது மகள் அதிதி தற்போது சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அதன்படி அவர் நடித்துள்ள முதல் படமான விருமன் நேற்று உலகமெங்கும் ரிலீசானது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தேன்மொழி எனும் கிராமத்து பெண் கேரக்டரில் நடித்திருந்தார் அதிதி.
இப்படத்தை பார்த்த பெரும்பாலானோர் அதிதியின் நடிப்பை வெகுவாக பாராட்டி உள்ளனர். அவர் நடிப்பை பார்க்கும் போது முதல் படத்தில் நடித்தது போல் இல்லை, மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார் என பாராட்டினர். முதல் படத்திலேயே மகளின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருவதால் இயக்குனர் ஷங்கரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... ஷாருக்கானுக்கு ஓகே சொல்லிவிட்டு.. அல்லு அர்ஜுனுக்கு அல்வா கொடுத்த விஜய் சேதுபதி! புஷ்பா 2-வில் இருந்து விலகலா?
இந்நிலையில், தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ள கூல் சுரேஷ், நேற்று விருமன் படத்தின் முதல் காட்சியை பார்த்த பின்னர், தான் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதியை காதலிப்பதாக கூறி பேட்டி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிதி ‘ஐ லவ் யூ’ என்ற வாசகம் அடங்கிய பதாகையையும் அவர் கையில் ஏந்தியபடி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
அந்த பேட்டியில் தனது காதலை ஏற்றுக்கொண்டு தன்னை மருமகனாக ஏற்றுக்கொள்ளும் படியும் இயக்குனர் ஷங்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் கூல் சுரேஷ். உங்கள் படத்தில் வரும் காதலன், காதலியை சேர்த்து வைக்கும் நீங்கள் எனது காதலையும் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் அந்த பேட்டியின் வாயிலாக இயக்குனர் ஷங்கருக்கு கோரிக்கை வைத்துள்ளார் கூல் சுரேஷ். அவரின் இந்த பேட்டி வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... “தம்பிராமையா வீட்டின் முன் முற்றுகையிடுவோம்” ... ஜீவி-2 விழா மேடையில் சீமான் எச்சரிக்கை! என்ன காரணம்?