Suriyan Peyarchi 2022: சூரியனின் பெயர்ச்சியால்..பாவங்களில் இருந்து விடுபட்டு வெற்றிகளை தொடும் சில ராசிகள்...
Suriyan Peyarchi 2022 Palangal: சிம்ம ராசியில் சூரியன் பெயர்ச்சி வரும் 2022 ஆம் ஆண்டு இறுதி வரை, இந்த ராசிக்காரர்களுக்கு பரிபூரண அருளை வழங்குவார்.இதனால் யாருக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம்.
Sun and Venus Transit
ஜோதிடத்தின் பார்வையில், சூரிய பகவானுக்கு தனி இடம் உண்டு. மரியாதை, வெற்றி, முன்னேற்றம் மற்றும் அரசு ஆகியவற்றின் காரக கிரகமாக சூரியன் கருதப்படுகிறது. சூரிய கடவுள் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். 11 மாதங்களுக்குப் பிறகு சூரிய பகவான் ஆகஸ்ட் 17 அன்று சிம்ம ராசியில் உள்ள தனது வீட்டிற்கு வருகிறார். இதையடுத்து, ஒரு மாதம் இங்கேயே தங்கி இருப்பார்.
Sun and Venus Transit
எனவே சூரியனின் ராசி மாற்றம் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2022 ஆம் ஆண்டின் இறுதி வரை, சூரிய பகவான் சில ராசிக்காரர்களுக்கு பூரண அருளை கொடுக்க உள்ளார். அதுமட்டுமின்றி, புதன் கிரகம் ஏற்கனவே சிம்ம ராசியில் தங்கி இருக்கிறார். இதனால், வரும் டிசம்பர் 31, 2022 வரை எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்கள் இருக்கப் போகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Sun and Venus Transit
சிம்மம்:
வேலையில் உற்சாகம் இருக்கும். வேலையில் கவனத்துடன் செயல்பட்டால், வருமானம், வெற்றி ஆகியவை வந்து சேரும். ஆன்மீக காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் தாயின் ஆதரவு கிடைக்கும். அன்னை மகாலட்சுமியின் அருளால் பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய நட்பு ஏற்படலாம். வேலையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்துடன் ஆன்மீக வழிபாட்டு தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம்.
Sun and Venus Transit
கன்னி:
தொழில் விரிவாக்கத் திட்டம் நிறைவேறும். சகோதரர்களின் ஒத்துழைப்பு இருக்கும. ஆனால் கடின உழைப்பு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். எதிரபாராத வகையில் செல்வம் பெருகும். வாழ்வில் அனுகூலம் கிடைக்கும், வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் துக்கம், வேதனைகள் விலகும்.
Sun and Venus Transit
விருச்சகம்:
விருச்சகம் ராசியினர் அதிக நம்பிக்கையுடன் இருங்கள். பணியிடத்தில் மாற்றம் சாத்தியம், கடின உழைப்பு அதிகம் இருக்கும். அன்னை மகாலட்சுமியின் அன்பும் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். லாபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில், மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
Sun and Venus Transit
மீனம்:
தொழிலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு, வேறு இடத்திற்கு மாற வேண்டி வரும். சகோதரர்களின் உதவியாலும் கடின உழைப்பு இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.