Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் வாரன் பபெட்.. இந்த விஷயத்தில் கில்லியாக அறியப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா யார்?

இந்தியாவின் வாரன் பப்பெட் என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Legendary Investor Rakesh Jhunjhunwala passes away
Author
First Published Aug 14, 2022, 9:41 AM IST

இந்தியாவின் வாரன் பப்பெட் என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 

மும்பையில் பணியாற்றி வந்த வருமான வரித்துறை அதிகாரி ராதேஷ்யாம் ஜுன்ஜுன்வாலாவின் மகனாக ராகேஷ், 1960ஆம் ஆண்டு பிறந்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ஷெகாவத் பகுதி இவரின் சொந்த ஊர். மும்பையில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவுடன் சி.ஏ படித்தார் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இவரது அப்பா வருமான வரித்துறை அதிகாரி. அப்பாவும் அவரது நண்பர்களும் பங்குச்சந்தை குறித்து தொடர்ந்து உரையாடவே, பங்குச்சந்தை குறித்த ஆர்வம் ஏற்பட்டது. 1985-ம் ஆண்டு வெறும் 5000 ரூபாயை முதலீடு செய்த ராகேஷ். 

இதையும் படிங்க;- ரூ. 5,000த்தை ரூ.11,000 ஆயிரம் கோடியாக உயர்த்திய பிக் புல் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா!!

Legendary Investor Rakesh Jhunjhunwala passes away

இன்று ஆப்டெக் லிமிடெட், ஹங்கம்மா டிஜிட்டல் உள்ளிட்ட பல நிர்வாக இயக்குநர்களின் ஒருவராக அறியப்படுகிறார்  ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. ஆனால், இவ்வளவு சொத்துக்களை அடைய வாழ்க்கையில் தான் ஆபதத்தான பல முடிவுகளை எடுக்க வேண்டி இருந்ததாக கூறியிருந்தார். தனது சேமிப்பு நண்பர்களிடம் இருந்து பெற்ற கடன், தணிக்கையாளராக இருந்த போது தன்னிடம் வந்த வாடிக்கையாளர்களின் பணம் ஆகியவற்றை பங்கு சந்தையில் முதலீடு செய்து அதை வங்கி சேமிப்பை விட லாபகரமாக திருப்பி அளித்து நம்பிக்கையும் பெற்றார். 

இந்த சம்பவத்தில் பலமுறை தோல்வி அடைந்தாலும் கூட மனம் தளரவில்லை. தான் செய்த தவறை திருத்தினார். மீண்டும் மீண்டும் பங்கு சந்தையில் முதலீடு செய்தார். 1986ம் ஆண்டு டாடா டீ  நிறுவன பங்குகளை 43 ரூபாய்க்கு வாங்க 3 மாதங்களில் அது 143 ரூபாயாக உயர்ந்தது. அதுவே ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் முதல் பங்கு வர்த்தகம் லாபமாகும். அடுத்த 3 மாததங்களில் லாபத்தைத 20 லட்சம் ரூபாயாக உயர்த்தினார். 

இதையும் படிங்க;- பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மரணம்; பிரதமர் இரங்கல்!!

Legendary Investor Rakesh Jhunjhunwala passes away

அந்த அளவிற்கு பங்கு வர்த்தகத்தில் ராகேஷின் முடிவுகள் துல்லியாக இருந்தன. 2008ம் ஆண்டு உலக பொருளாதார மந்த நிலையின் போது ராகேஷின் பங்குகள் 30 சதவீதம் வீழ்ச்சி அடைய பல்லாயிரம் கோடி ரூபாயை இழந்தார். ஆனால், அதனை பற்றி அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை. மீண்டும் முதலீடு, மீண்டும் வர்த்தகம் என தனது முயற்சிகளை கைவிடவில்லை. 2012ம் ஆண்டு  இழந்ததை விட 10 சதவீதம் கூடுதலாக பெற்றார். விடா முயற்சி நம்பிக்கை மீண்டும் மீண்டும் முதலீடு. இதுதான் இந்தியாவின் வாரன் பப்பெட் என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தாரக மந்திரம். இந்தியாவில் பலரும் தைரியமாக பங்கு சந்தையில் முதலீடு செய்ய  ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மிக பெரிய முன்னுதாரனமாக இருந்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios