B.sc நர்சிங் முடித்தவர்களுக்கு அருமையான வேலை.. எய்ம்ஸ் மருத்துவமனையில் காலி பணியிடம்.. எழுத்து தேர்வு எப்போது?

எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் தேசிய காசநோய் நிறுவனத்திலும் காலியாக உள்ள செவிலியர் அதிகாரிகள் பதவிகளுக்கான NORCET எழுத்துத் தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

Nursing officer posts - Nursing Officer Recruitment Common Eligibility Test (norcet) 2022 dates announced

காலி பணியிடங்கள்:

புதுடெல்லி, குவகாத்தி  என நாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும், தேசிய காசநோய் நிறுவனத்திலும்  காலியாக செவிலியர் அதிகாரிகள் பணியிடங்கள்
 
விண்ணப்பிக்கும் தேதி: 

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் இந்த மாதம் 4 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு நடைபெறும் நாள்: 

நர்சிங் ஆபீசர் ஆள்சேர்ப்பு பொது திறன் தேர்வு (NORCET) 2022 செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. 

மேலும் படிக்க:NLC யில் காலி பணியிடங்கள்.. பொறியியல் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

கல்வித்தகுதி: 

முதலாவது: 

நர்சிங் தொடர்புடைய படிப்புகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் இல்லாமல் இருத்தல் வேண்டும். 

முக்கிய குறிப்புகள்: 

பல்கலைக்கழகம் அல்லது மாநில நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூட் / இந்தியன் நர்சிங் கவுன்சில்-லிருந்து B.Sc Nursing / B.Sc (Hons) Nursing படித்திருக்க வேண்டும்.

பல்கலைக்கழகம் / இந்திய செவிலியர் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூட்/இந்தியன் நர்சிங் கவுன்சில் - லிருந்து  B.sc. (Post  Certificate)/ Post-Basic B.Sc. Nursing படித்திருக்கலாம்

மாநில / இந்திய செவிலியர் கவுன்சிலில் மருத்துவ பணிப்பெண் மற்றும் செவிலியராக பதிவு செய்திருக்க வேண்டும்.

இரண்டாவது:

குறிப்பிடப்பட்ட படிப்புகளில் டிப்ளமோ முடித்தவர்கள், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்புகள்:

போர்டு அல்லது கவுன்சில் / மாநில செவிலியர் கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூட் / இந்தியன் செவிலியர் கவுன்சில் -லிருந்து பொது செவிலியர் மருத்துவ பணிப்பெண் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

அதே போல் மாநில/ இந்திய செவிலியர் கவுன்சிலில் செவிலியர் மற்றும் மருத்துவ பணிப்பெண்ணாக பதிவு செய்திருக்க வேண்டும்.

மேலும் குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் இரண்டு வருட பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை.. 12 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. விண்ணப்பிப்பது எப்படி..?

சம்பள விவரம்: 

குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு தகுதியானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை வழங்கப்படும். 

வயது வரம்பு:

விண்ணப்பத்தாரர்களுக்கு வயது 18 யிலிருந்து 30க்குள் இருக்க வேண்டும்.  எஸ்.டி, எஸ்.சி பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பில் இருந்து 5 ஆண்டு வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டு வரை வயது சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பக் கட்டணம்: 

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.3000 ஆக செலுத்த வேண்டும். எஸ்.டி, எஸ்.சி, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் ரூ.2400 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனை: 

ஒதுக்கப்படாத இடங்களுக்கு போட்டியிடும் எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு தளர்வு அளிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  aiimsexams.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூடுதல் தகவல்களை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios