மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை.. 12 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. விண்ணப்பிப்பது எப்படி..?
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உள்ள காலி புறத் தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
கல்வித்தகுதி:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர் 12 ஆம் வகுப்பை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் தேதி:
இன்று மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம். கடந்த மாதம் 29 ஆம் தேதி விண்ணப்பதிவு தொடங்கியது.
அனுபவம்:
குழந்தைகள் சார்ந்த வேலைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் பணி செய்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், உரிய கல்வி சான்றுகள், அனுபவ சான்றிதழ்களுடன் தங்களது விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பங்களை krishnagiri.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
No.8 &10, DRDA வணிக வளாகம்,
மாவட்ட மைய நூலகம் எதிரில்,
கிருஷ்ணகிரி - 635002.
தொலைபேசி எண். 04343-292567, 6382613358 அல்லது
dcpokri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.