வரும் 17 ஆம் தேதி டெல்லி செல்லும் தமிழக முதலமைசர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்.
வரும் 17 ஆம் தேதி டெல்லி செல்லும் தமிழக முதலமைசர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்.
அத்துடன், புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரையும் முதல்வர் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு வந்ததற்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழகம் நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் பேசுவார் என்று சொல்லப்படுகிறது.