பாஜகவினர் நுழைந்தது எப்படி..? அந்த செருப்பு பத்திரமாக இருக்கிறது.. புகைப்படத்தை வெளியிட்டு பிடிஆர் ட்வீட்
தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர், வீசப்பட்ட செருப்பு பத்திரமாக இருக்கிறது என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் மேலும் அதில் அவர், நேற்று நடந்த சம்பவத்தைப் பற்றி நான் பிறகு கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நேற்று அவரது சொந்த ஊர் மதுரைக்கு வந்தது. இந்நிலையில் இராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது, உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்பதற்காக மதுரை விமான நிலையத்தில் அக்கட்சியினர் கூடியிருந்தனர். அப்போது அமைச்சருடன் வந்த திமுக தொண்டர்கள் மற்றும் பாஜகவினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க:பிடிஆரிடம் காலையில் சவால்.. இரவில் சமாதானம்.. மதுரை சரவணனின் மர்ம முடிச்சு
இந்நிலையில் அஞ்சலில் செலுத்தி விட்டு திரும்பி சென்ற போது, அமைச்சர் காரினை பாஜகவினர் முற்றுகையிட்டனர். மேலும் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் அமைச்சரின் கார் மீது காலணி வீசினர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் நேற்று நள்ளிரவு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரை சந்தித்து தனது வருத்தத்தை தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை என்றும் பாஜகவிலிருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்தார்.
மேலும் படிக்க:செருப்பு வீச்சு சம்பவத்தை தூண்டியதே டாக்டர் சரவணன் தான்... பாஜக பகீர் குற்றச்சாட்டு
இதனிடையே மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் பாலா உள்ளிட்ட 6 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடயே தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர், வீசப்பட்ட செருப்பு பத்திரமாக இருக்கிறது என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்
மேலும் படிக்க:பிடிஆர் கார் மீது வீசப்பட்ட செருப்பு.. போராட்டத்தில் குதித்த திமுக - தமிழக முழுவதும் பரபரப்பு
மேலும் அதில் அவர், நேற்று நடந்த சம்பவத்தைப் பற்றி நான் பிறகு கூறுகிறேன். பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் தன்னுடைய கட்சி உறுப்பினர்களுடன் எப்படி அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டார்? என்றும் அந்த செருப்பை திரும்பப்பெற விரும்பினால் பெற்றுக்கொள்ளலாம். என்னுடைய ஊழியர்கள் அதை பத்திரமாக வைத்திருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.